Saturday, February 17th, 2018

பேஸ்புக்கில் பழகிய பெண்ணை பிரபல வானாலி அறிவிப்பாளர் ஏமாற்றி ரூ.30 இலட்சம் மோசடி

Published on June 10, 2017-8:31 pm   ·   No Comments
womenமுகப்புத்தகம் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி 30 இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமனிறில் முற்படுத்தப்பட்ட கொழும்பில் இருந்து ஒலிபரப்பாகும் பிரபல வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று (9) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
30 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று ஆட்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபா பெறுமதியான காணி ஒன்றின் பிணையில் செல்ல இவருக்கு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அனுமதியளித்தார்.
சந்தே நபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர் தென்மராட்சிப் பகுதியியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முகப்புத்தகம் ஊடக பழகி அவரிடம் இருந்து சுமார் 30 இலட்சம் ரூபா வரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப பெண்ணுடனான தொடர்புளை அவர் துண்டித்துள்ளார். குறித்த நபரின் கைத்தாலைபேசி மற்றும் வானொலி நிலைய தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்த போதெல்லாம் அவற்றைத் துண்டித்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே இந்த மோசடி குறி;து பாதிக்கப்பட்ட யுவுதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டுக்கு அமைய அறிவிப்பாளர் கடந்த வாரம் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பாளரை கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிவான் நேற்று அனுமதி வழங்கினார்.
(பாறுக் ஷிஹான்)women

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...
TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...