Monday, June 26th, 2017

வடமாகாணத்தில் முதன் முறையாக ஆணழகன் போட்டி VIDEO

Published on June 11, 2017-9:53 pm   ·   No Comments
analaganவடமாகாண முதலாவது  ஆணழகன் போட்டி யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன்  விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(10)  சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியானது போர் காலத்தின் பின்னர் சட்டபூர்வமான முறையில் முதன் முறையாக    வடமாகாணத்தில்  அங்கீகாரம் பெற்று நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.
மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான    இந்த போட்டியில் அதிகளவான இளைஞர்கள் ஆர்வத்துன் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன் போது பல்வேறு நிறை  தொடர்பாக போட்டிகள் நடைபெற்றதுடன்  பல இளைஞர்கள் தங்களது உடற்கட்டமைப்பினை வெளிக்காட்டி  சிறந்த பெறுபேறுகளை குறித்த போட்டிகளில்   பெற்றுக்கொண்டனர்
இதில் 50 கிலோ எடை தொடக்கம் 85 கிலோ எடை வரையுள்ளவர்கள் பல  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அப்  பிரிவுகளிலும் முதலிடங்களை பெற்றவர்களுக்கு  சம்பியன் போட்டி இடம்பெற்ற நிலையில் இறுதியாக வடமாகாணத்தின் சிறந்த ஆண் அழகானகாக சி. தயாநிசான் தெரிவானார்.  இரண்டாவதாக சிவலிஙங்கம் சுரேகன் மற்றும் மூன்றாவதாக   செல்வகுமாரன்(சிறி)  கோகுலராசன் ஆகியோர் தெரிவாகினர்.
அத்துடன் இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அதிதிகளினால்    சான்றிதழ்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கை உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன் கூட்டமைப்பு  பொதுச்செயலாளர் டி.என். வீரதுங்க  அதன் யாழ் மாவட்ட அனுசரணையாளர் ஏ.ஜெயகிரிசாந் யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார்    யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தின் செயலாளர் ஜெ.துஷியந்தன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளும் இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


analagan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...