Saturday, February 17th, 2018

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம்

Published on June 16, 2017-5:50 pm   ·   No Comments
januarமுதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத நிலையிலேயே மாகாண சபையின் ஆளுங்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையெழுத்திட்டதாக அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் யாசின் ஜவாகீர் (ஜனூபர்) தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பணத்திற்காகவோ அமைச்சுப் பதவிக்காகவோ நாங்கள் ஒருபோதும் சோரம்போகவில்லை. எந்தச்சந்தர்ப்பத்திலும்; சோரம் போகவும் மாட்டோம் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டு உடலில் குண்டுத் துகள்களை தாங்கிக்கொண்டு ஊனமுற்றும் வாழ்வாதாரத்திற்கு பரிதவிக்கும் அபலைகளின் நல்வாழ்வுக்காகவும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் நலனுக்காகவும், எந்தவிதமான காத்திரமான திட்டங்களில் அக்கறை காட்டாமலும் மூவின மக்களின் நல்லுறவுக்காக எந்தமவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமலும் இருந்ததனாலேயே நாம் கையெழுத்திட்டோம்.
மாகாணசபையின் ஆளுங்கட்சி கொண்டுவந்த பிரேரணையில் கையெழுத்திடுவதன் மூலம்  மாற்றம் ஒன்று கிடைக்கும் என நம்பினோம். அரசின் நிகழ்ச்சி நிரலுக்கோ பணத்திற்கோ நாங்கள் இயங்கவில்லை.
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நாங்கள் எந்தக் காலத்திலும் எதிராக இருக்கவில்லை. இருக்கவும் மாட்டோம். தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் இந்தப் பிராந்தியத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே  இற்றைவரை மாகாணசபை நிருவாக நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கினோம். முதலமைச்சரின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் கொண்டு வந்த பிரேரணைக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்கினோமே தவிர பின்னால் நின்று எவருக்கும் முதுகிலே குத்தவில்லை. சதி வேலைகளிலும் நாம் ஈடுபடவில்லை.
முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவில் எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு. மாகாண சபையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட  அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்புவது எந்த வகையில் நியாயம். அவ்வாறெனில் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்கள் ஊழலற்ற நிர்வாகத்தை மேற்கொள்கின்றது என்பதை முதலமைச்சரால் நிருபிக்க முடியுமா? ஒருவருக்கெதிராக சுட்டு விரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களை பற்றி சிந்திக்க வேண்டியது கடப்பாடு அல்லவா? இவ்வாறு அவர் கூறினார்.januar

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...
TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...