Sunday, November 19th, 2017

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு.

Published on June 18, 2017-12:37 am   ·   No Comments

DSC_0285இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியருமான ஞானசுந்தரம் குகநாதன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் நவயுக நக்கீரன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகம் ஊடகவியலாளர் குகநாதன் அவர்களின் 65ஆவது அகவையை முன்னிட்டும் ஊடகத்துறையில் கால் பதித்து 50 அகவை நிறைவை முன்னிட்டும் அவர் திருமண பந்தத்தில் இணைந்து 40ஆண்டுகள் நிறைவை முன்னிட்டும் மதிப்பளிக்கும் விழா ஒன்றை நேற்று சனிக்கிழமை ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடத்தியது.

ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆலய பரிபாலனசபையினர் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

ஆலய முன்வீதியிலிருந்து செந்தூரன் குழுவினரின் மங்கள வாத்திய இசையுடன் ஊடகவியலாளர் ஞா.குகநாதன், அவரின் துணைவியார் திருமதி நல்லநாயகி குகநாதன் ஆகியோர் அழைத்து செல்லப்பட்டு ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா. ஜோதிநாதநாதக்குருக்கள் பூசைகளை நடத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் மதிப்பளிக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆறுமுகம் செந்தில்நாதன் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாட்டுக்குழுவில் ஒருவரான ஜெயமோகன் சிறப்பு மலரை வெளியிட்டு வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தமிழர் மனித உரிமை மையப் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், ஊடகவியலாளர்களான இரா.துரைரத்தினம், , ரவி, சண்.தவராசா, எம்.சுஜர்சன், மற்றும் திருமதி விஸ்வசீதா அட்சரநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், எஸ்.புவனேந்திரன், எஸ்.சரவணபெருமாள், லோகேஸ்வரன், தாமோதரம், றெயின்தாள் தமிழ்மன்றம் சார்பில் உதயகுமார் உட்பட பலரும் வாழ்த்துரைகளை வழங்கினர்.

இளம் ஊடகவியலாளருக்கு வழிகாட்டியாக திகழ்ந்த குகநாதன் செய்திகளை தேடுவதில் மட்டுமல்ல செய்திகளை கறப்பதிலும் வல்லவர் என வாழ்த்துரை வழங்கிய ஊடகவியலாளர்கள் புகழாரம் சூட்டினர்.

50ஆண்டுகால ஊடக பணி என்பது சாதாரணமான ஒன்றல்ல, அந்த அசாத்திய பயணத்தில் வெற்றி கொண்ட குகநாதன் யாழ்ப்பாணத்தில் மிக நெருக்கடியான காலத்தில் உயிராபத்தின் மத்தியில் பணியாற்றினார். பல தடவைகள் உயிராபத்தில் இருந்து தப்பிய போதிலும் 2011ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் தேடிக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து தனது எழுத்தின் திசையை ஆத்மீக துறையின் பக்கம் திருப்பி கொண்டாலும் இன்னும் அவரிடமிருந்து சமூக நலன்சார்ந்த ஊடகப்பணியை எமது சமூகம் எதிர்பார்க்கிறது என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பதிலுரை வழங்கிய ஊடகவியலாளர் குகநாதன் தன்னை ஊடகத்துறைக்கு அழைத்து வந்த தந்தையை நினைவு கூர்ந்தார். தந்தையின் வழியில் ஊடகத்துறையில் 50 ஆண்டுகாலம் தனது கடினமான ஊடகப்பயணத்தில் சலிக்காது தன்னுடன் பயணித்த துணைவியாருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய பொருளாளர் சதா.அற்புதராசா நன்றியுரையாற்றினார்.

(இரா.துரைரத்தினம் ) DSC_0285DSC_0008DSC_0011DSC_0017DSC_0029DSC_0034DSC_0070DSC_0087DSC_0117DSC_0136DSC_0140DSC_0163DSC_0164DSC_0166DSC_0167DSC_0174DSC_0175DSC_0177DSC_0213DSC_0222DSC_0224DSC_0237DSC_0241DSC_0246DSC_0250DSC_0253DSC_0259DSC_0266DSC_0274DSC_0276DSC_0285DSC_0293IMG_0009IMG_0015IMG_0032IMG_0046IMG_0057IMG_0061IMG_9965IMG_9996

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...