Thursday, October 19th, 2017

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன்.

Published on June 18, 2017-11:03 pm   ·   No Comments

Selvakumaranமாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அவரின் பதவியை இழக்க செய்வதற்கான அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு. அவர் மாகாணசபை உறுப்பினர் பதவியை இழந்தால் முதலமைச்சர் பதவியையும் இழப்பார் என கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் வசந்தம் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  தன்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என அவர் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நீதி கோர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நியாயமான காரணங்கள் இருந்தால் அவர் எந்த கட்சியில் போட்டியிட்டாரோ அந்த கட்சி அவரை மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க முடியும். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துதான் ஒருவரை நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்றால் அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரரணை கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரின் செவ்வியையும் வடமாகாணசபையில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பாகவும் அரசியல் விமர்சன பார்வையுடனான சமகால பார்வை என்ற நிகழ்ச்சியை இந்த வீடியோவில் பார்வையிடலாம்.


Selvakumaran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...