Sunday, September 24th, 2017

புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவளிக்க மாட்டோம்- அஸ்கரிய பீடம் அறிவிப்பு

Published on July 3, 2017-12:54 pm   ·   No Comments
Bikkuபுதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் இடைக்­கால அறிக்கை இறுதி செய்­யப்­ப­ட­வுள்ள நேரத்­தில், அஸ்­கி­ரிய பீடத்­தின் தலை­மை­யில் நேற்று ஒன்­று­கூ­டிய பௌத்த சங்கச் சம்மே­ள­னங்­கள், புதிய அர­ச­மைப்­புக்குத் தமது முழு­மை­யான எதிர்ப்பை வெளி­யி­டத் தீர்­மா­னித்­துள்­ளன.
புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டால், அனைத்துப் பௌத்த பீடங்­க­ளை­யும் ஒன்று திரட்டி அதனை முழு­மை­யாக எதிர்ப்­ப­தற்கு அவை நேற்று முடிவு செய்­துள்­ளன.
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்துக்காக அமைக்­கப்­பட்­டுள்ள வழி­ந­டத்­தல் குழு தனது இடைக்­கால அறிக்­கையை எதிர்­வ­ரும் 6 ஆம் திகதி பெரும்­பா­லும் இறுதி செய்­ய­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பிர­தான இரு கட்­சி­க­ளி­டை­யே­யும் காணப்­பட்ட இழு­பறி நிலை­கள் ஓர­ளவு தீர்க்­கப்­பட்டு பொது இணக்­கத்­துக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.
 நாளை செவ்­வாய்க்கிழமை தொடக்­கம் மூன்று நாள்­கள் வழி­ந­டத்­தல் குழு­வின் தொடர் அமர்வு நடத்தி, இடைக்­கால அறிக்கை இறுதி செய்­யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தரு­ணத்­தில், பௌத்த மக்­க­ளின் மிக முக்­கி­ய­மான – ஆட்­சித் தரப்­புக்­க­ளின் கடி­வா­ளத் தரப்­பான அஸ்­கி­ரிய பீடத்­தின் தலை­மை­யில், பௌத்த சங்க சம்­மே­ள­னம் நேற்­றுக் கூடி­யது. இதில், அர­ச­மைப்­பில் திருத்­தம் மாத்­தி­ரமே மேற்­கொள்ள முடி­யும்.
தேர்­தல் முறைமை மற்­றும் நிறை­வேற்று அரச தலை­வர் அதி­கார முறைமை இவை இரண்­டில் மாத்­தி­ரமே திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யும். புதி­தாக அர­ச­மைப்பை உரு­வாக்க முயற்­சித்­தால், நாட்­டி­லுள்ள அனைத்து பௌத்த பீடங்­க­ளை­யும் அணி திரட்டி, அர­ச­மைப்பு முயற்­சியை முழு­மை­யாக எதிர்ப்­பது என்று முடிவு செய்­துள்­ள­னர். Bikku

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...