Monday, July 24th, 2017

மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்- நஷ்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on July 3, 2017-6:22 pm   ·   No Comments

Batticaloa-Courts-and-Libமட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின் தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் தமிழ் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், எனவே, அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரி, மட்டக்களப்பை சேர்ந்த செல்வராஜா புஸ்பராணி மற்றும் அண்ணாமலை செல்வராஜா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மனுதாரர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

இதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, அப்போதைய மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ,எஸ்.விக்ரமரத்ன, தனது சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு 50,000 ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...