Thursday, January 18th, 2018

சுவிஸ்குமார் தொடர்பில் மழுப்பலாக சாட்சியமளித்ததால் கொதிப்படைந்தது தீர்ப்பாயம்!!

Published on July 4, 2017-1:22 pm   ·   No Comments

courtsபுங்குடுதீவு வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்ற சமயம் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேரா தீர்ப்பாயத்தில் மழுப்பலான வகையில் சாட்சியமளித்ததை அடுத்து அவரைத் தீர்ப்பாயம் கடுமையாக எச்சரித்தது.

இன்று தீர்ப்பாயத்தில் வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்றபோது ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் சாட்சியம் வழங்கினார். இவரே இந்த வழக்கின் முதன்மை விசாரணை பொலிஸ் அதிகாரியாவார். அவரிடம் பிரதி மன்றாடியார் அதிபதி விசாரணைகளை மேற்கொண்டார்.

முதல் 8 சந்தேகநபர்கள் தொடர்பாக திருப்திகரமாகச் சாட்சியங்கள் வழங்கிய பொலிஸ் அதிகாரி 9 ஆவது சந்தேகநபரான சுவிஸ்
குமார் தொடர்பில் மழுப்பலான முறையில் சாட்சியம் வழங்கினார்.

9ஆவது சந்தேகநபரைத் தான் கைது செய்யவில்லை என்றும், அவரைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவரை மன்றில்
முற்படுத்தவில்லை என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

அதை அவதானித்த நீதிபதிகள் கடும் தொனியில் அவரை எச்சரித்தனர்.

“உமது பகுதியில் நடைபெற்ற இந்தப் பாரதூரமான சம்பவம் நடைபெற்றபோது நீரே பொறுப்பதிகாரி. 9 ஆவது சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரப்பட்டபோது நீர் கைது செய்யவில்லை. வெள்ளவத்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல் தொடர்பான பொலிஸ் அறிக்கை அவர்களால் கோரப்பட்டது. நீர் அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளீர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்த தவறியதாலேயே மக்கள் கொதிப்படைந்து யாழ்ப்பாண நீதிமன்றைத் தாக்கினர்.  நீதிமன்றைத் தாக்கியமைக்கும் உமது செயற்பாடே காரணம்.

9ஆவது சந்தேகநபர் தொடர்பான விவரங்களை நீர் நீதிமன்ற விசாரணைகளில் மறைத்துள்ளீர். 8 சந்தேக நபர்களைக் கைது செய்த  நீர் மிகப் பாரதூரமான ஒரு கொலைக்குற்றம் நடந்த வேளையில் 5.19.2015 அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று மகரகம நீதிமன்றத்துக்கு சென்றது பாரதூரமான பொறுப்பற்ற செயல். மகரகம நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு இலக்கத்தை ஒப்படைக்க வேண்டும்.”- கடும் தொனியில் நீதிபதிகள் எச்சரித்தனர்.

9 ஆவது சந்தேகநபருக்கும் உமக்கும் ஏதாவது தொடர்புண்டா என்றும் நீதிமன்று சந்தேகம் எழுப்பியபோது பொலிஸ் அதிகாரி அதை மறுத்தார்.vithya

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...