Monday, November 20th, 2017

வடக்கு மாகாண அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­யில் 4 சத­வீ­தம் மட்­டுமே மே வரை­யில் செலவு

Published on July 4, 2017-1:30 pm   ·   No Comments

North provinceநடப்பு ஆண்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொ­டை­யில் 4 சத­வீ­தம் மாத்­தி­ரமே மே மாதம் முடிவு வரை­யில் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் 15 சத­வீ­தம் தொடக்­கம் 20 சத­வீ­தம் வரை­யி­லேயே பௌதீக ரீதி­யி­லான முன்­னேற்­றத்­தை­யும் அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­கங்­கள் மற்­றும் திணைக்­க­ளங்­க­ளின், 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரை­யி­லான நிதி முன்­னேற்ற அறிக்கை மற்­றும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரை­யி­லான பௌதீக முன்­னேற்ற அறிக்கை’ தக­வ­லுக்­கான உரி­மைச் சட்­டத்­தின் ஊடா­கக் கோரப்­பட்­டது.

வடக்கு மாகாண பிர­தித் தலை­மைச் செய­லா­ளர் திட்­ட­மி­டல் அலு­வ­ல­கத்­தின் தக­வல் அலு­வ­லர் பி.ஜோன்­சன் பதில் வழங்­கி­யுள்­ளார். அந்­தப் பதி­லில், 2017ஆம் ஆண்­டின் பிர­மான அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொ­டை­யின் கீழ் 551.2 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.

மே மாதம் 31 ஆம் திகதி வரை­யில் 52.6 மில்­லி­யன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. திணைக்­க­ளங்­க­ளி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற வேலைத் திட்­டங்­க­ளில் ஏறத்­தாழ 30 சத­வீ­தம் வரை­யான பௌதீக முன்­னேற்­றத்தை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

2017ஆம் ஆண்­டுக்­கான மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொ­டை­யின் கீழ் ஆயி­ரத்து 657.18 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. செயற் திட்­டங்­க­ளுக்­கான அனு­மதி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறு­தி­யில் கிடைக்­கப் பெற்­றது. மே மாதம் 31ஆம் திகதி வரை­யில் 50.81 மில்­லி­யன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சகல திணைக்­க­ளங்­க­ளும் வேலைத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­து­டன் 15 சத­வீ­தம் தொடக்­கம் 20 சத­வீ­தம் வரை­யி­லான பௌதீக முன்­னேற்­றத்­தி­னை­யும் அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது – என்று பதில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நன்­கொடை நிதி­யில் 52.6 மில்­லி­யன் ரூபா மே மாதம் 31 ஆம் திகதி வரை­யில் செலவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வ­லுக்­கான உரி­மைச் சட்­டப் பதி­லில் வழங்­கப்­பட்­டுள்­போ­தி­லும், வடக்கு மாகாண சபை­யின் இணை­யத் தளத்­தில் 54.04 மில்­லி­யன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொ­டை­யில் 5081 மில்­லி­யன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக வழங்­கப்­பட்­டுள்ள பதி­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­போ­தும் இணை­யத்­த­ளத்­தில் 68.5 மில்­லி­யன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.North province

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...