Wednesday, January 17th, 2018

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…”

Published on July 9, 2017-9:30 am   ·   No Comments

stanislosஇலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் 9ம் அட்டவணை 3 நிரல்களை உள்ளடக்கி உள்ளது…

அவையாவன:-

1) List -1 ( Provincial Council List)
2) List -2 ( Reserved List)
3) List – 3 ( Concurrent List)

இங்கு மாகாணசபை ( Provincial Council List ) நிரலில் உள்ள 37 விடயங்களை அதன் பிற்சேர்க்கைகளிற்கு அமைவாக முழுமையாகவும், அத்துடன் ஒருங்கிணைந்த நிரலில் ( Concurrent List) உள்ள 36 விடயங்களை குறிப்பிட்ட ஓரளவிற்கும் கையாளும் அதிகாரத்தை இப் 13 வது திருத்தம் மாகாண சபைகளிற்கு வழங்குகின்றது.

அரச காணி அதிகாரம் மாகாணசபைகளிற்கு உள்ளதா?

இக் கேள்விக்கு எனது பதில் ஆம் என்பதாகும். மாகாண சபைக்குட்பட்ட அரச காணியை கையாளும் அதிகாரம் Provincial Council List ல் 18 வது அங்கமாக இவ்வாறு கூறப்படுகின்றது…

“18. Land – Land, that is to say, rights in or over land, land tenure, transfer and alienation of land, land use, land settlement and land improvement, to the extent set out in appendix…”

அத்துடன், ஓர் மாகாணத்தில் உள்ள அரச காணி ஒன்றை ஒருவரிற்கு பகிர்ந்தளிப்பது அல்லது கைமாற்றுவது எவ்வாறு என்பது தொடர்பில் இம்மாகாண நிரலற்கான பிற்சேர்க்கை 2ன் ஏற்பாடு 1:3 இவ்வாறு கூறுகிறது…

Appendix -2

Land and Land Settlement

State Land shall continue to vest in the Republic and may be disposed of in accordance with Article 33(d) and written law governing the matter.

Subject as aforesaid, land shall be a Provincial Council Subject, subject to the following special provisions :-

1:3 :- Alienation or disposition of the State land within a Province to any citizen or to any organization shall be by President, on the advice of the relevant Provincial Council, in accordance with the laws governing the matter.

இதன்படி ஓர் மாகாணத்தில் உள்ள அரச காணி ஒன்றை ஒரு நபரிற்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ கைமாற்றும் அல்லது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை, குறித்த சம்மந்தப்பட்ட மாகாணசபையின் ஆலோசனையின் அடிப்படையில், ஐனாதிபதியினால் மேற்கொள்ளப்படும். ஆக, இந்த “Advice of the relevant Provincial Council ” என்பது மாகாண அரச காணி தொடர்பில் மத்திய அரசு, மாகாண அரசுடன் சரியாக கலந்துரையாடி செயற்படும் ஓர் ” Consultative Process” ஐ கட்டாய தேவைப்பாடாக்குகிறது. அரச காணியை பகிர்ந்தளிப்பது தொடர்பான இத்தகைய ” ஆலோசனை ( Advice)” மாகாண அமைச்சரவையால் அம்மாகாண ஆளுநர் ( Governor) ஊடாக மத்திய அரசிற்கு தெரியப்படுத்தப்படும். மாகாண சபைக்கு பொறுப்பு கூறும் கடமைப்பாடு மாகாண அமைச்சரவையையே சாரும்.

மேலும், மாகாண அரச காணி தொடர்பில், காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்திற்கு ( Land Development Ordinance) அமைவாக, அந்தந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களிற்கு வழங்கப்படும் ” Permit” மற்றும் “Grant” என்பவற்றை ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டை செய்யும் அதிகாரத்தை ” மாகாண காணி ஆணையாளரிற்கு” ( Provincial Land Commissioner) 1989 ம் ஆண்டின் 12 ம் இலக்க மாகாண சபைகள் சட்டம் ( The Provincial Council ( Consequential Provisions) Act No.12 of 1989) வழங்கியது. இவ் அதிகாரம் தற்போது மாகாண காணி ஆணையாளரின் “முகவரான” பிரதேச செயலாளர் ( Divisional Secretary- DS) மூலம் அந்தந்த பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

ஆக, 13 வது திருத்தச் சட்டம் 14.11.1987 ல் நடைமுறைக்கு வந்த பிற்பாடு “காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின்” பிரிவு 19 (2) ன் கீழான “Permit” மற்றும் “Grant” ஐ மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்காக, பயனாளிகளை தெரிவுசெய்யும் ( Selection of Allotees) அதிகாரம் அந்தந்த மாகாண சபைகளையே சாரும்.
எந்தவொரு “மத்திய அமைச்சரும்” மாகாண சபையின் பயனாளிகளை தெரிவு செய்யும் இவ் அதிகாரத்தை இல்லாமல் ஆக்கவும் முடியாது…அவ்வாறு செய்தால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்…அதற்கு துணைபோகும் பிரதேச செயலாளரின் செயற்பாடு அதிகார வரம்பு மீறலாகும்( Ultra Virus).

நான் கூறிய இவ்விடயங்களிற்கு ஆதாரமாக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ( Court of Appeal) தீர்க்கப்பட்ட வழக்கான H.M.Jothipala Vs. Divisional Secretary, Wellapana என்ற வழக்கில் நீதியரசர் Sisira De Abrew இவ்வாறு தனது தீர்ப்பில் கூறுகிறார்…

” Whilst the State Land is vested in the state, the utilization, administration and control could be with the Provincial Councils”

அதாவது “அரசகாணிகள் முடிக்குரிய சொத்தாக காணப்படும் போதிலும் அவ்வாறான அரச காணிகளை பயன்படுத்தும், நிர்வகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபையிடமே இருக்கும்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேற்கூறிய அரசியலமைப்புச்சட்ட, நியதிச்சட்ட, தீர்ப்புச்சட்ட ஏற்பாடுகளின் பின்னணியிலேயே நாம் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில், வடமாகாண சபைக்கு தெரியாமலும் அதன் ஆலோசனை பெறாமலும், ஒட்டுசுட்டானிற்கு எதுவித சம்பந்தமும் இல்லாத, எங்கேயோஇருக்கும் சில “நபர்களை”, பயனாளிகளாக, எவரின் விருப்ப்பபடியோ தெரிவு செய்து, அவர்களிற்கு காணி பங்கீடு செய்து, அமைச்சர் “சுவாமிநாதனின்” அனுசரணையுடன் பொருத்து வீட்டுத் திட்டமும் செய்துகொடுக்க ஏற்பாடாகியுள்ள விடயத்தை நாம் ஆராய வேண்டும்.

இவ் ஒட்டுமொத்த செயற்பாடும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது மட்டுமன்றி இயற்கை நீதிக் கோட்பாடுகளிற்கும் விரோதமானது.

வடபகுதி தமிழரின் எதிர்கால இருப்பிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உருவாகப் போகின்ற இவ் விடயங்கள் தொடர்பில், அதிகமான அதிகாரங்களை தன்வசம் வைத்திருக்கும் காணி அமைச்சருமான முதலமைச்சருமான விக்னேஸ்வரன் ஐயா, எந்தவிதமான உருப்படியான கருமங்களையும் செய்யாமல், ஐனாதிபதிக்கும் பிரதமரிற்கும் வெறும் கடிதங்களை எழுதிக் கொண்டிருப்பது தமிழருக்கு ஒருபோதும் நன்மை தராது…

இவ் விடயத்தில் முதலமைச்சர் மட்டுமல்ல, ஏனைய நான்கு அமைச்சர்களின் செயற்பாடுகளும் மாகாணசபை அமர்வுகளிற்குகூட ஒழுங்காக போகாமல், தமது சொந்த வேலைகளிற்கே அதிக நேரத்தை ஒதுக்கி வாழும் ஏனைய உறுப்பினர்களது செயற்பாடுகளும் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்….நிற்க…

இவ் விடயத்தில் வடமாகாண காணி அமைச்சரான விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, தனக்கு வாக்களித்த , வடபகுதி மக்களிற்காக கடமை செய்யத் தவறினால், இச்சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக, உரிய நீதிமன்றில், உரிய நபர்களிற்கு எதிராக ( காணி அமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட) தமிழர் நலன்கருதி வழக்குத் தாக்கல் செய்வேன்.

“யார் சரி செய்தாலும் சரி…யார் பிழை செய்தாலும் பிழை…”

சட்டத்தரணி ஸ்ரனிஸ்லோஸ் செலஸ்ரின்.stanislos

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...