Tuesday, November 21st, 2017

நீண்டகாலத்திற்கு பின் ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சரர் ஆலயத்தை பார்வையிட்ட மக்கள்.

Published on July 9, 2017-5:30 pm   ·   No Comments

Vaddeesar kovil 4நீண்டகாலத்திற்கு பின்னர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சுரர் ஆலயத்தை மக்களும் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டதுடன் பூசை வழிபாடுகளையும் நடத்தி;னர்.

காலத்தால் அழியாத வரலாற்றுப்பின்னணி கொண்ட ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சரர் ஆலயப்பூசைகள் நடைபெறுவதற்கு உதவவேண்டுமென்று மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அப்பகுதிக்கு பொதுமக்களும் அதிகாரிகளும் சென்றனர். இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் சென்றிருந்தார்.

தமிழர் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த இடமாக வாவெட்டி மலைப்பகுதி காணப்படுகின்றது. முன்னைய காலத்தில் நாளாந்தம் பூசை வழிபாடுகள் ஈச்சரர், அம்மன் தலங்களுக்கு மரபுவழியில் நடைபெற்று வந்துள்ளன.

இறுதிப்போரின் முடிவில் இப்பகுதிகள் வனஇலாகாவின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டதோடு இதன் அண்மித்த பகுதிகளில் கருங்கல் அகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன. பாரம்பரியமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் ஆலயத்துக்கும் வாவெட்டீச்சரர் ஆலயத்துக்குமுள்ள வழிபாட்டுத் தொடர்பில் இணைந்த பூசையாக வேட்டைத்திருவிழா நடைபெறுகின்றது.

தமது பாரம்பரிய வழிபாட்டினை நாட்பூசையாக செய்வதற்கான ஒப்புதலைப்பெற்றுத்தரும்படி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கமைய குறிப்பிட்ட இந்த இடங்களைப் பார்வையிடும் பொருட்டு முதலமைச்சரின் அமைச்சுச்செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீசுவரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் மக்கள் எனப்பலரும் 2017.07.07ஆம் திகதி அவ்விடத்திற்கு சென்றனர். அவ்விடங்கள் தமிழர் தம் வரலாறுகளை பறைசாற்றி நிற்கின்றது. குருக்களும் அங்கு சென்று பூசை வழிபாடுகளை நடத்தினார். Vaddeesar kovilVaddeesar kovil 1Vaddeesar kovil 2Vaddeesar kovil 3Vaddeesar kovil 4Vaddeesar kovil 5Vaddeesar kovil 6Vaddeesar kovil 7

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...