Monday, July 24th, 2017

ஊடகத்துறையில் 50ஆண்டுகளை நிறைவு செய்த ஏ.எல்.எம். சலீமுக்கு நிந்தவூரில் பொன்விழா

Published on July 10, 2017-11:53 am   ·   No Comments

saleem 4ஊடகத்துறையில் 50ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பொன்விழா அவர் பிறந்த ஊரான நிந்தவூரில் நடைபெற்றது

இந்த விழாவில் ஊடகத்துறையை சார்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1966 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறையில் நுழைந்த சலீம் அவர்கள் இலங்கையில் உள்ள பிரபல பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல், உதயன், சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகள் உட்பட வானொலி தொலைக்காட்சிகளுக்கும் செய்தியாளராக பணியாற்றியிருந்தார். இன்று வரை அவர் ஊடகங்களில் பணியாற்றி வருவது சிறப்பம்சமாகும்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உபதலைவராகவும் பணியாற்றிய அவர் தமிழ் முஸ்லீம் மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார்.

இவரின் ஊடக பணியை பாராட்டும் வகையில் நேற்று நிந்த வூரில் நடைபெற்ற பொன்விழா நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், மற்றும் அமீர்அலி, பசீர் சேகு தாவுத், உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுsaleemsaleem 4saleem3saleem 2saleem 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...