Wednesday, January 17th, 2018

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன்,

Published on July 16, 2017-10:29 am   ·   No Comments

kirupakaranஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ஊடகத்துறைகான சர்வதேச நிறுவனமான ‘சாரம் 19’ என்ற அமைப்பு, இம் முறை இரு பக்க கூட்டங்களை ஊடகதுறை சார்பாக நடாத்தியிருந்தது.

இவற்றை சாரம் 19ன் இயக்குனர் தோமஸ் குகர்ஸ் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார். இதன பேச்சாளர்களாக, முக்கிய புள்ளிகளான – ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஏலினா டொனகோஸ் – (இவரே சிறிலங்கா மீதான தொடர்ச்சியான இரு கண்டன பிரேரணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றியவர்), பேச்சு சுதந்திரத்திற்கான ஐ.நா.வின் விசேட நிபுணர் டேவிட் காய், ஒஸ்ரியா நாட்டின் ஐ.நா. தூதுவர் தோமஸ் காயானோசி, பேராசிரியர் ராஸய அப்துல்லா, பீற்றர் கான்லிப் ஆகியோர் உரையாற்றியதுடன், இக் கூட்டத்தில் பல சர்வதேச ஊடக சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டங்கள் – ‘போலி பொய் செய்திகள்’ (Fake News), ‘தொழில்சார் ஊடகத்துறையே ஊடகங்களின் சவால்களிற்கான பதில்’   (  (Professionalism of journalists – an answer to challengs of contemporary media   ) ஆகிய இரு முக்கிய பொருட்களின் அடிப்படையில் நடைபெற்றன. இக் கூட்டங்களில், ஊடகங்களில் வெளியாகும் போலி பொய் செய்தி, தொழில்சார் ஊடகத்துறை, பத்திரிகை சுதந்திரம், ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்கள், செய்தி தணிக்கை, சுய தணிக்கை ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழன் என்ற முறையில், இங்கு ஆராயப்பட்ட கருத்துக்கள், வரைவிலக்கணங்களை எமது புலம்பெயர் தேசத்து ஊடகத்துறையுடன் ஒத்து பார்க்கும் வேளையில், கூடுதலான புலம்பெயர் தேசத்து ஊடகங்கள், விசேடமாக பெரும்பாலான இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளில் ஐம்பது வீதத்திற்கு மேலானவை போலி பொய் செய்தியானவையாகவே கருதப்பட வேண்டியவை. இவற்றிற்கு முக்கிய காரணி, அப்படியாக செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் தாம் தொழில்சார் ஊடகத்துறை இல்லை என்பதை தங்களை தாமே நிருபிக்கின்றன. ஊடகங்களின் பெயரில் இப்படியான நிலைப்பாடு, தொழில்சார் ஊடகவியலாளாருக்கு மிகவும் கஸ்டமான நிலையை உருவாக்குகிறது.

போலி பொய் செய்திகளை யார் எதற்காக எங்கு வெளியீடுகிறார்களென்பதை அவர்கள் ஆராய்ந்த வேளையில், இவை யாவும் வரையறை, துறைசார் அற்ற இணையதளங்களிலும், முக நூல்கள் மூலாமாகவே வெளியாவதாக கூறப்பட்டது. தமிழர்கள் ஆகிய நாம், இவற்றை விசேடமாக 2009ம் ஆண்டு மே மாத்தத்தின் பின்னர் பரவலாக காண முடிகிறது.

இவற்றிற்கு இரு ஊதாரணங்களை இங்கு கொடுக்க விரும்புகிறேன்.

யாவரும் நன்றாக அறிந்த வணபிதா கீத பொன்கலன் அவர்களது இறப்பு பற்றிய செய்தி கடந்த வருடம், திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டது. உண்மையில் கீத பொன்கலன் அவர்கள் செய்திகளில் வெளியானது போல், திருகோணமலை கடலில் நீச்சலுக்கு சென்ற வேளையில் இறக்கவில்லை. அங்கு அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்பதே உண்மை.

இது பற்றிய விபரங்களை அவரது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறவினர்கள் நன்கு அறிவார்கள். சிறிலங்காவின் காவற்துறையினர், இவரது இறப்பு கொலை என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதையும் தொடர்ந்து மேற்கொள்வதையும்; யாரும் மறுக்க முடியாது. வணபிதா கீத பொன்கலன் அவர்களை, பிராந்திய வேறுபாட்டின் அடிப்படையில் நன்றகாக திட்டமிட்டு சில அரசியல் பிரமுகர்களின் பின்ணனியில் கொலை செய்யப்பட்டார் என்பதே உண்மை.

இவரை கொலை செய்தவர்கள், ஏமாளி செய்தியாளர்களின் உதவியுடன், இவரது இறப்பு கடலில் நீச்சல் வேளையில் இடம்பெற்றது என உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட போலி பொய் செய்தியை வெளியிட்டு வெற்றி கண்டார்கள். வணபிதா கீத பொன்கலன் அவர்களுடன் சில வருடங்கள் நெருங்கி பழகியவன் என்ற முறையில், அவரை யார் யார் எதிரிகளாக பார்த்தார்கள்? எதற்காக அப்படியாக பார்த்தார்கள் என்ற சில உண்மைகளை அவர் வாழும் காலத்திலேயே அறிந்திருந்தேன்.

போலி செய்திகளிற்கு அடுத்த நல்ல உதாரணம், முன்னாள் சிறிலங்கா அரசினாலும், அவர்களது கை கூலிகளினாலும் சிறிலங்கா அரச, அரசுசார் ஆங்கில சிங்கள ஊடகங்களில் என்னை பற்றி வெற்றிகரமாக பரப்பப்பட்ட பரபரப்பான செய்தி.

அது என்னவெனில், என்னை கைது செய்வதற்கா, சர்வதேச பொலீஸார் (  The International Police Organization or INTERPOL)   பாரீசிற்கு வந்த வேளை, நான் ஓடி ஒழித்துள்ளதாகவும், நான் சர்வதேச பொலீஸாரினால் தேடப்படும் ஓர் நபர் எனும் பொய்யான செய்தியை அவர்கள் வெற்றிகரமாக பரப்பினார்கள். இச் செய்தி வெளியானதும், இலங்கைதீவில் வாழும் எனது நண்பர்கள், நலன் விரும்பிகள் உடன் என்னை தொடர்பு கொண்டு இச் செய்தி பற்றி வினாவினார்கள். இறுதியில் இச் செய்தி எந்த ஆதாரங்களும் அற்ற போலி செய்தி என்பதை, ஐ.நா. மனித உரிமை சபையின் மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கான நிபுணரின் அறிக்கையினால் நிராகரிக்கப்பட்டது. அவ் அறிக்கை வெளியானதும், இவ் போலி செய்தியின் மூலகர்த்தாக்கள் ஓடி மறைந்து விட்டனர்.

அடுத்து இக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கருத்து என்னவெனில், பொலி செய்தி என்பது பெரும்பலான சந்தர்பங்களில் ஏதோ நோக்கங்களை கொண்டதாகவும் அவ் நோக்கம் என்பது, ஒர் கருத்தை ஆராய்ந்து விவாதிக்கு தன்மை அற்றவர்களினால் தான் வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டது. உண்மை செய்திகள் அறிக்கைகள், உத்தியோகபூர்வமான செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவது அல்லது வெளியிடாமல் தணிக்கை செய்வதும் பொலியென கூறப்பட்டது.

செய்தி தணிக்கை, சுய தணிக்கை

செய்தி தணிக்கை, சுய தணிக்கை பற்றி ஆராயப்பட்ட வேளையில் – தணிக்கை என்பது பொதுவாக ஓர் ஏதேச்ச அரசினால், சர்வாதிகார அரசினால் மக்களை அடக்கி ஆழ்வதற்காக பாவிக்கபடும் கருவியென கூறப்பட்டது.

சுய தணிக்கை என்பது, அரசாங்கங்கள், அரச சார்பற்ற ஊடக நிறுவனங்களினால், தமது கருத்திற்கு ஏற்றவாறு செய்திகளை பிரசுரிப்பதும், தமது கருத்தை பிரதிபலிப்பவர்களை மட்டும் தம்முடன் இணைத்து தமது கருத்திற்கு பலம் சேர்பதை உதாரணமாக கூறப்பட்டது. தமிழ் மொழியில் கூறுவதனால், ஓர் தொலைகாட்சியோ, பத்திரிகையோ, இணையதளமோ – தமக்கு ஏற்ற சில ‘ஆமா சாமிகளை’ தேர்தெடுத்து, தம்மை கதாநாயகர்களாக காண்பிப்பது. காரணம் தமது கருத்திற்கு மாற்று கருத்தை ஆதாரங்களுடன் கூறபவர்கள் முன்வருவார்களெயானால், தமது பொட்டு கேடுகள் யாவும் உடைபட்டுவிடும் என்ற பீதியே காரணம்.

பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வரிசையில், அரசாங்கங்கள் முன்னணி வகிப்பதாகவும், பத்திரிகை சுதந்திரத்தை கட்டுபடுத்துவதன் மூலம், ஓர் அரசு மக்களை இருட்டில் வைக்க முயல்வதானால், அம் மக்கள் கிளர்ச்சி கொண்டு எழுந்து இறுதியில் கைது, காணமல் போதல், சிறை, படுகொலை போன்ற விபரீதங்களில் முடிவதாகவும் கூறப்பட்டது. அரசாங்கங்களை குறை கூறும் அதேவேளை, ஆயுத குழுக்கள், விடுதலை போராளிகளும், கிளர்ச்சியாளர்களும், தமக்கு சார்பற்றவர்களை சாடுவதாகவும் கூறப்பட்டது. விடுதலை விரும்பிகள், விடுதலை போராட்டத்தை முன்னெடுப்பவர்கள், வன்மையான அரசாங்கங்கள் போல் அல்லாது, மற்றவர்களின் பேச்சு சுதந்திரம், எழுது சுதந்திரத்தை மதிப்பவர்களாக காணப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டது.

ஊடகம் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி ஆராய்ந்த வேளையில், செய்தி தணிக்கையை கடைபிடித்தும், கடைபிடியாமலும் உண்மை செய்திகள் வெளியிடப்படுவதை விரும்பாத அரசுகள், பணம் படைத்த குபேரர்கள், ஆயுத போராளிகள் – பத்திரிகையாளரையும், ஊடகவியலாரையும் எதிரிகளாக பார்ப்பதனால், அங்கு அநீதியின் அடிப்படையில் இத்துறைசார் செயற்பாட்டாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவதாகவும், உண்மை யாதார்த்தத்தை தொடர்ந்து எழுத துணிந்தவர்கள், விபரீதங்களை சந்திப்பதாவும் கூறப்பட்டது.

இவ் கூட்டங்கள் ஒத்துமொத்தமாக, மறைந்த துணிந்த ஊடகவியலாளர்களை வாழ்த்தி போற்றியதுடன், துறைசார் ஊடகத்துறை என்பது என்றும் சவால்கள் நிறைந்ததாக காணப்படுவது தவிர்க்க முடியாத போதிலும், அவர்களினாலேயே ஊடகத்துறை சரியான பதையில் இட்டுச் செல்லப்படுவதாகவும் கூறப்பட்டது.

செய்தி தவறானது என நிருபிக்ககப்பட்ட பின்னரும், அதற்கு திருத்தமோ, மன்னிப்பு கேட்கதா ஊடகம் ஒன்று திகழுமானால், அது நிட்சயம் பிரச்சார ஊடகமாகவே கணிக்கபட வேண்டும் என்பது இவ்விரு கூட்டங்களில் உரையாற்றியவர்கள் கருத்தாக காணப்பட்டது.

புலம்பெயர் தேசம்

புலம் தேசங்களில், ஆயுத போராட்ட காலங்களிலே அரசியல் தெரிந்ததோ இல்லையோ, சிலர் தம்மை அரசியல் செயற்பாட்டாளராக கண்பிப்பது நாகரீகமாக காணப்பட்டது. இந் நிலை, ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், விசேடமாக 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் மாற்றமடைந்து. நாலு வரி எழுதுபவர் தன்னை ஊடகவியலாளராகவும், ஐ.நா.வாசல் வரை சென்றவர்கள் தங்களை தாமே மனித உரிமை செயற்பாட்டாளராக பறை சாற்றுவதை நாம் புலம் பெயர் தேசத்தில் காண முடிகிறது.

காரணம், ஆயுத போராட்ட வேளையிலும், அதன் பின்னரும் துறைசார் செயற்படுகளா நிலைத்து தலைநிமிர்ந்து தொடர்ச்சியான வேலை திட்டமாக காணப்படுபவை – மனித உரிமை செயற்பாடும், ஊடகத்துறை ஆகிய இரண்டுமே. ‘கழுதைக்கு விளங்குமா கற்பூர வாசனையை’ என்பது போல், மனித உரிமை செயற்பாடு பற்றி பலரால் புரிய முடியாத நிலை காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஓர் மனித உரிமை செயற்பாடு என்பது ஏட்டு கல்வி, பயிற்சி, உயர் கல்வி ஆகியவற்றுடன் பின்னி பிணைந்தவை. இதே போல், ஓர் ஊடகவியலாளர் என்பவர், ஊடகத்துறையில் உள்ள திறமைபடைத்த அனுபவசாலியினால் பல வருடங்களாக, பகுதி பகுதி பயிற்றப்பட்டு, சிலவருட அனுபவத்தின் பின்னரே ஊடகத்துறையில் ஒரு புதியவரது கன்னி படைப்பு ஆரம்பமாகும். இதேவேளை மேலைநாடுகளில் பல்கலைகழகங்களில் துறைசார் கல்வி கற்றவர்களும் இவற்றில் அடங்குவார்கள்.

ஆனால் பெருப்பலான புலம்பெயர் வாழ் தனி நபர்கள், ஊடகத்துறையை மிகவும் துஸ்பிரயோகம் செய்கிறார்கள். ஊடகத்துறை என்பது ஓர் பாரிய நிறுவனம். இது பல பிரிவுகளையும், உப-பிரிவுகளையும் கொண்டவை. இவற்றில் – எழுத்தாளர் பகுதி, விளம்பர பகுதி, விநியோகஸ்தர் பகுதி, கணக்காளர் பகுதி, வடிவமைப்பாளர் பகுதி, அச்சிடும் இயந்திர பகுதியென ஐந்து முக்கிய பிரிவுகளையம், அவற்றிற்றுக்குள் சில உப-பிரிவுகைளயும் உள்ளடக்கியவை.

இவ் ஐந்து பிரிவுகளிலும், எழுத்தாளர் பகுதியை சார்ந்தவர்களை மட்டுமே ஊடகவியலாளர் அல்லது பத்திரிகையாளரென அழைப்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகத்துறையில் – விளம்பரம் செய்வோர், விநியோகஸ்தர், கணக்காளர், வடிவமைப்பாளர், அச்சிடும் இயந்திர பகுதியை சார்ந்தவர்கள் யாரும் ஊடகவியலாளரோ அல்லது பத்திரிகையாளோரோ இல்லை. இவ் நடைமுறை யதார்த்தம் இன்றைய கால பகுதியில், விசேடமாக புலம் பெயர் தேசத்தில் சுயநலம் கருதி துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.

அச்சிடும் இயந்திரத்தில் வேலை செய்தவர்களும், வடிவமைப்பாளர்களும், பத்திரிகை துறையில் கணக்காளராக வேலை செய்தவரும் தம்மை சிரேஸ்ட பத்திரிகையாளர் அல்லது ஊடகவியலாளரென கூறுவதை இன்று நாம் புலம்பெயர் தேசத்தில் பரவலாக காணுகிறோம். இவ் நிலைப்பாடு அனுபவம் திறமை வாய்ந்த துறைசார் ஊடகவியலாளர்களிற்கு பாரிய இழுக்காவும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இதேவேளை சில பத்திரிகையாளர் ஊடகவியலாளர் உண்மை செய்திகளை திரிபுபடுத்துவதுடன் உண்மைகள் யதார்த்தங்கள் வாசகர்களிடம் சென்றடையாது சுய தணிக்கை, சுய தவிர்ப்பு செய்வதையும், தமக்கு வேண்டதவர்களது செவ்விகள், வாழ்த்து செய்தி, ஆசிச் செய்தி, இரங்கல் செய்திகளை தணிக்கை செய்வது போன்ற செயற்பாடுகள், புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் நடைபெறுகிறது. பெரும்பலான துறைசார் ஊடகவியலாளர் இவற்றிற்கு விதிவிலக்கானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்துவ துறை அல்லது பொறியியாலளர் துறையை நாம் எடுத்து கொண்டால், முன்பு அப்போதிகரி என்பவர்கள் தமது இருபத்து ஐந்து வருடகால அனுபவத்தின் பின்னரே, தம்மை டாக்டர் என எழுத, கூறும் தகமை உடையவர்களாகின்றனர். இதே போல் பட்டம் பெறாத ஓர் பொறியியலாளர், ஓர் குறிப்பிட்ட கால சேவையின் பின்னரே தன்னை பொறியியலாளர் என எழுத, கூறும் தகுதியை பெறுகிறார். ஆனால் புலம் பெயர் தேசத்தில் நாலு வரி எழுதியவர்களை ஊடகவியலாளர் அல்லது பத்திரிகையாளார் என கூறப்படும் பரிதாப நிலையை இன்று நாம் காணுகிறோம்.

ஆகையால் தமிழ் ஊடகதுறையிலும் இது போன்ற நடைமுறைகள் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தபட வேண்டும். இதன் மூலம் அச்சு இயந்திரங்களில் வேலை செய்தவர்களும், வடிவமைப்பாளர்களும், விளம்பரங்களின் சில்லறைகணக்கு பார்ப்பவர்கள், நாலுவரி எழுதுபவர்களும் புலம்பெயர் தேசங்களில் ஊடகவியலாளர், பத்திரிகையாளர் என கூறி சங்கங்களில் உயர்பதவிகளை வகிப்பது தவிர்க்கப்படும்.

பத்திரிகையாளர் ஞானசுந்தரம் குகநாதன்

நாம் யாருடைய சேவையை வாழ்த்துவதற்கு அல்லது தட்டிக் கொடுக்க விரும்பினால், அவ் நபரது வாழ் நாளிலேயே அவற்றை செய்தாக வேண்டும். ஒருவர் இறந்த பின்னர் அவரது புகைபடத்திற்கு ஓர் மாலை அணிவித்து, சந்தனப் பொட்டும் போட்டு, அவருடன் முரண்பட்டவர்கள் உட்பட சிலர் நடைபெறாதவற்றை நடந்ததாகவும், நடந்தவற்றை மூடிமறைந்து உரையாற்றுவது போன்ற மிகவும் கெவலமான செயல் உலகில் வேறு எதுவும் கிடையாது. இதற்கு பல ஊதரணங்களை நாம் ஏற்கனவே கண்டள்ளோம், இன்னும் காணவுள்ளோம்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் மறைந்த வேளையில், சுவிஸ்நாட்டில் ஓர் அனுதாப கூட்டம் நடைபெற்றது. மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்கள் முன்பு ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டில் கலந்து கொள்ள வரும் ஒவ்வொரு வேளையிலும், அவருடன் தினமும் முரண்பட்ட ஒருவர், மேடையில் ஏறி, ‘அண்ணவின் இறப்பு எமக்கு பாரிய இழப்பு’ என கூறியது எம்மில் பலரை வியப்பில் ஆற்றியது. இதே நபர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் லண்டனில் ஓர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற வேளையில், அவரை மேடையிலேயே ஏற்றப்படாது என்ற நிபந்தனையையும் முன் வைத்தவர். அப்படியான ஒருவரது போலி உரை பலரை கை கொட்டி சிரிக்க வைத்தது. இதை தான் கூறுவார்கள் ‘கபட’ நாடகம் நடிகர்களினால் மேடையேற்றப்படுவதாக.

நிற்க, வாழ் நாளிலே ஒருவரது சேவை பாராட்டப்பட்டு விழா நடாத்தப்பட்ட வரிசையில், நாட்டில்; இலைமறை காயாக வாழ்ந்து, தற்சமயம் சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வரும் சிரேஸ்ட்ட பத்திரிகையாளர், திரு ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் அடங்குவார்கள். திரு குகநாதனது அயராத தமிழ் தேசியம் சார்பான பத்திரிகை சேவை பற்றி, அவர் மீதான படுகொலை முயற்ச்சி 2011ம் ஆண்டு நடைபெறும் வரை, அவர் பற்றி பெரிதாக பலர் அறிந்திருக்கவில்லை. காரணத்தை யாவரும் அறிவார்கள்!

இவரது ஐம்பது ஆண்டு ஊடக பணியை மதிப்பளிக்கும் விழாவை, யூன் 17ம் திகதி, சுவிஸ்லாந்தில், சென்காலன் மாநகரில் அமைந்திருக்கும் சிறி கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகித்தினர் மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தது மிகவும் வரவேற்க வேண்டிய விடயமாகும். இங்கு முக்கியமாக முன்வைக்கபட்ட ஆட்கபூர்வமான கருத்து என்னவெனில், இலங்கைதீவில் விசேடமாக வடக்கு கிழக்கில் ஊடகவியலாளராக கடமையாற்றிய பலர், சுவிஸ்லாந்தில் தஞ்சம் பெற்று வாழுவதனால், புலம் பெயர் தேசங்களில், எமது எதிர்கால சந்ததியினருக்கு ஓர் ஒழுங்கான ஊடக கல்வி நிறுவனம் சுவிஸ்லாந்தில் உருவாக வேண்டும் என்பதேயாகும். கூடிய விரைவில், சுவிஸ்லாந்தில் வாழும் தமிழ் துறைசார் ஊடகவியலாளர் இவற்றை நடைமுறைபடுத்த முன் வருவார்களென நம்புகிறோம்.

செய்தி தணிக்கை, சுய தணிக்கை செய்யும் எந்த நபரும், சிறிலங்கா அரசின் ஊடக செய்தி தணிக்கை பற்றி கதைப்பதற்கு எழுதுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதே யதார்த்தம்.

ச.வி.கிருபாகரன்
பிரான்ஸ்
14-07-2017kirupakaran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...