Tuesday, February 20th, 2018

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு?

Published on July 20, 2017-12:00 pm   ·   No Comments

hisbulla and charlsமட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் பழிவாங்க படுவதாக பிரதேச செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆற்று மண் அகழ்வுக்கான அனுமதியை உடனடியாக வழங்குமாறு அரசாங்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்றைய தினம் புதிய மண் அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய புவிச்சரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை புறந்தள்ளி மட்டக்களப்பின் மண் வளத்தை விற்பனை செய்ய அரசாங்க அதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த  2015 ம் ஆண்டு முதல் செங்கலடி பிரதேசத்தில் புதிதாக மண் அனுமதி பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் செங்கலடி பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து  வெளிப்படையாக மண் அகழ்வை நிறுத்த வேண்டும் என கூறி பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாது  மீண்டும்  மண் அனுமதி பத்திரம் வழங்கும் பணியை அரசாங்க அதிபர் ஆரம்பித்துள்ளமை மாவட்டத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் செங்கலடி மற்றும் வாகரை பிரதேச செயலாளர்களை இடம் மாற்றிவிட்டு அவர்களால்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண் அனுமதி பத்திரங்களை அவசர அவசரமாக வழங்குவதற்கான காரணம்  என்ன என அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் ?

பிரதேச செயலாளர்களுக்கு கணி மற்றும் ஆற்று மணல் குறித்து வழங்கப்பட்டுள்ள அரச சுற்று நிறுபங்களுக்கு எதிராக மாவட்ட அரசாங்க அதிபரின் குறித்த  செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 ஆற்று மணல் ஏற்றும் அனுமதியை வர்த்தக சங்கத்தின் ஊடாக தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கி மாவட்டத்தின் மண் வளத்தை விற்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக இதனை தடுத்து நிறுத்த மாவட்ட அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க சுற்று நிறுபத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களை பறித்து தான் விரும்பும் தனியார் நிறுவனத்தின் ஊடாக மண் வியாபாரம் செய்ய அரசாங்க அதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளை  எவ்வாறு விற்று  இல்லாமல் செய்தார்களோ அதே போன்று இன்று மண்னை விற்று பணம் சம்பாதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காகவே இரண்டு பிரதேச செயலாளர்களையும் விசாரணை என்ற போர்வையில்  இடமாற்றம் செய்துள்ளார்கள்.

இன்னும் இரண்டு பிரதேச செயலாளர்களை விசாரணை என்ற போர்வையில் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யும் முயற்சிகளை அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருகின்றார் . இது இந்த மாவட்டத்தில் பிரதேச உள்ள  செயலாளர்கள் மக்களுக்கு  சுயாதீனமாக சேவை செய்யும் அதிகாரத்தை இல்லாதொழித்து அவர்களை பழிவாங்குவதாக அமைந்துள்ளது.

ஊழல் நிர்வாகத்திற்கு துணை போக மறுக்கும் பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக பழிவாங்க படுகின்றனர்.

ஊழலுக்கு துணை போனவர்கள் ஊழல் செய்தவர்கள் எல்லோரும் இந்த மாவட்டத்தில் பதவி உயர்இது நல்லாட்சிலும் தொடர்கிறது.

பொய் குற்றச்சாட்டில் கொழும்பிற்கு விசாரணை என்ற போர்வையில்  இடமாற்றப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் இப்போதுதான் அரசாங்க அதிபர் ஈடுபட்டுள்ளார்.

எமது சக அதிகாரிகளான செங்கலடி மற்றும் வாகரை பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அரசாங்க அதிபர் இன்று அவர்களுக்கு எதிரான புகார்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது ஏன்?

பிரதேச காணி அதிகாரிகளையும் கிராம சேவை உத்தியோகத்தர்களையும் அழைத்து குறித்த பிரதேச செயலாளர்களுக்கு எதிரான புகார்களை திரட்டி தருமாறு கூறுவது ஏன்?

அவர்களது பிரதேசத்தில் உள்ள சிலருக்கு சலுகைகள் வழங்குவதாக கூறி மாற்றப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு எதிராக புகார்களை பெற்றுக் கொள்வது ஏன்?

மண் போமிட் வழங்குவதாக பலரை அழைத்து பிரதேச செயலாளர்களுக்கு எதிராக புகார்களை எழுதி தருமாறு கோருவது ஏன்?

இது தான் நீங்கள் அதிகாரிகளை வழிநடத்தும் திறனா?

உங்களுக்கு இடமாற்றம் வந்தால் பிள்ளைகளின் படிப்பு பாழாகிவிடும் அதனால் மாவட்டத்தை விட்டு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் நீங்கள் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மட்டும் குடும்பங்களை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அது என்ன நியதி என தெரிவித்துள்ளனர்.hisbulla and charls

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...