Thursday, October 19th, 2017

கிழக்கு மாகாண தேர்தலில் தமிழ்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும்; வலுப்பெற்றுவரும் கோஷம்!

Published on July 27, 2017-7:07 pm   ·   No Comments
east chief ministerஇழந்தது போதும் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் மனவிரக்தியில், அரசியல் ரீதியான நிரந்தர தீர்வும்  எட்டப்படாத நிலையில்  தொடர் சோதனைகளோடு நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள், காலத்திற்கு காலம் குறைவில்லாமல்  தேர்தல்களையும், வாக்குறுதிகளையும்  மாத்திரம் சந்திக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான  அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண தமிழ்  மக்களிடமும்,  பொதுசிந்தனைவாதிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள்.  என எல்லோரிடமும் பொதுவான கருத்து ஒன்று மேலோங்கிவருவதை அவதானிக்கமுடிகிறது.
தமிழ் கட்சிகள் பிரிந்து பிரிந்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்கு சின்னாபின்னமாக்கப்படாமல் அனைத்து தமிழ்  கட்சிகளும் புரிந்துணர்வுடன் ஒரு அணியில் போட்டியிட்டு  கிழக்கு மாகாணசபை ஆட்சிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும்,  எந்த கட்சிகளுக்கும் சாராத  மக்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேவை செய்யக்கூடிய ஆளுமைமிக்க தமிழர் ஒருவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற எதிர்பார்புமே பரவலாக காணப்படுகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாத ஒரு வெறுமை உணர்வை  2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நோக்கமுடிகிறது  இந்த நிலைமை கிழக்கு மாகாணத்தில் ஒரு படி மேலாக உள்ளது  என்றே கூறலாம் இந்த ஆதங்கத்தினை  மக்களிடத்திலும் அவதானிக்ககூடியதாக உள்ளன
 கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால்  ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது யாவரும் அறிந்தவிடயமே,   இக்கட்சி சிறந்த  கட்டுக்கோப்போடு வழிநடத்தப்பட்டதனால் தமிழ்  மக்களின் அமோக  ஆதரவும் கிடைத்தன, வடக்கு கிழக்கில் தொடர்  வெற்றிகளையும்  பெற்றுவந்தன,  ஆனால் மக்கள் ஆதரவை, மக்கள் வைத்த நம்பிக்கையை 2009 ஆம் ஆண்டின் பின்னர் அதே நிலையில் தக்க வைத்துக்ககொள்ள தவறியுள்ளதா? எனும் கேள்விகளும் எழுந்வண்ணமே உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு    தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும்  மக்களுக்கு  பதில் கூறவேண்டி பொறுப்பு உள்ளன.
 தற்போது மக்கள் மத்தியில் இக்கட்சிகள் பல்வேறு வகையான  விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளதுடன். மக்களிடம்   ஆதரவும் சரிந்துவருவதனை  உணரமுடிகிறது இவ்விடயத்தினை இங்கு குறிப்பிடுவதன்  காரணம்  தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைசொல்வது  நோக்கமல்ல ஆனால்  கிழக்கில் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தலில்; எந்த வகையிலும் தமிழர் வாக்குகள் சொற்பளவும்   பிரிபடக்கூடாது என்பதற்காகவும்  தமிழர் வாக்குகள் பிரிபடாமல்  தமிழர் ஒருவர் இம்முறை முதலமைச்சராக வருவதனை ஒவ்வொருவரும் உறுதிசெய்ய வேண்டியது அவசியம் எனும் மனநிலை அனைவரிடமும் உருவாகியுள்ளதன் வெளிப்பாடே  அனைத்து தமிழ் கட்சிகளும்  ஒரணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும்   எனும்   கோஷம்  கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர் மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவருவதற்கு காரணமாகும்.
கிழக்கு மாகாணத்தில் 40 வீதம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் கடந்தமுறை அதிக ஆசனங்களை பெற்ற கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதும் முதலமைச்சர் பதவியினை தாங்கள் விட்டுக்கொடுத்திருந்தார்கள் ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசத்தில் காணப்படும் பல முக்கிய பிரச்சனைகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புடனும்  தீர்வுகள் காணப்படவில்லை .
உதாரணமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கென தனியான கட்டிடம் உள்ளது, தனி நிருவாகம் இயங்குகிறது ஆனால் அதனை நிரந்தரமாக்கும் முயற்சி கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இழுத்தடிப்பு செய’யப’பட்டு வருவதுடன்  பல்வேறு வழிகளில் தடைகளும்  போடப்ட்டே வருகின்றன.  இவ்வாறு  கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல விடயங்களில் நெருக்குதல்களை சந்தித்துகொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கில் விட்டுக்கொடுப்புடனும் மத்தியில் இணக்க அரசியலிலும் ஈடுபடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த பொறுப்பையும் செய்துமுடிக்க தவறிவிட்டது என்ற ஆதங்கமும் இம்மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
எனவே கடந்தமுறை முதலமைச்சர் பதவியினை விட்டுக்கொடுத்தோம் இம்முறை தமிழர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் எ;ற  நிலைப்பாட்டுடன் உள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைத்து  தமிழ் கட்சிகளும்  ஓரணியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவே மக்கள் கருத்துக்கள் வலுப்பெற்று வருகிறது.
 
-பாண்டிருப்பு கேதீஸ்-

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...