Sunday, November 19th, 2017

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Published on August 3, 2017-3:30 pm   ·   No Comments

azmin5வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பாக தனது முகநூலில் தெரிவித்த கருத்துக்களால் முஸ்லீம் மக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக காத்தான்குடியை தலைமையகமாக கொண்ட அவர் சார்ந்த கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனால் அவரின் எதிர்கால அரசியல் சிக்கலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் (3.8.2017) ‘1990 ஆகஸ்ட் 03ம் நாள் காத்தான்குடியில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள்’ என தனது முகநூலில் அஸ்மீன் பதியவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்பதிவிற்கு கிழக்கு மாகாணத்தை முஸ்லீம் சமூக தலைவர்கள் முஸ்லீம் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்ததுடன் ஆயுததாரிகள் என்பதை மாற்றி விடுதலை புலிகள் தான் இச்சம்பவத்தை செய்தார்கள் என மாற்றி பதியவிடுமாறு வற்புறுத்தினர்.

முழுமையான விசாரணைகள் நடைபெற்று தீர்ப்பு வராமல் அக்கொலையை செய்தது விடுதலைப்புலிகள் தான் என குற்றம் சாட்ட முடியாது என்றும் ஆயுததாரிகள் என்றே குறிப்பிட முடியும் என்றும் அஸ்மின் பதிலளித்திருந்தார்.

இந்த விடயம் அவர் சார்ந்த நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியிடமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளார் என பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.

அய்யூப் அஸ்மினை பலமுறை விசாரணைக்கு அழைத்தும் கட்சியின் அழைப்பை மதிக்காமல் தொடந்தும் புறக்கணித்துக் கொண்டே வருகிறார்.

நாளை ( 04.08.2017) மாலை கூடவுள்ள கட்சியின் தலைமைத்துவ சபை இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித் தனமாக தொடர்ந்தும் செயற்பட்டும் கருத்துக் கூறியும் வருகிறார். முறைப்படி விசாரணை செய்ய வேண்டும் என்பதனாலேயே இவ்விடயம் தாமதமாகி வருகிறது. ஆனால் இதனை ஜனநாயகபூர்வமான எமது அணுகுமுறையை அவர் கட்சியின் பலவீனமாக காட்ட முனைகிறார்.

எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அவரது விவகாரம் பேசித் தீர்க்கும் எல்லையைக் கடந்து விட்டது.
இப்போது கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே மக்களது உணர்வுகளோடு விளையாடும் வண்ணம் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

அதுவும் கட்சியின் முக்கிய ஆதரவுத் தளமான காத்தான்குடி மக்களைத் தூண்டும் வண்ணம் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து சிறுபிள்ளைத் தனமானது. அதனை கட்சி ஒருபோதும் சரி காணவில்லை. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை புலிகள்தான் செய்தார்கள் என்பது பகிரங்க உண்மை. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. இதை யாரும் புதிதாக நிறுவ வேண்ணடியதில்லை.

அவருக்கு போதிய அவகாசம் கொடுத்தாகி விட்டது. அவர் யாருக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதும் தெளிவாகி விட்டது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அதனை விரைவில் எதிர்பாருங்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் குறிப்பிட்டுள்ளதாக காத்தான்குடி ஊடகவியலாளரான முஹம்மட் அஸ்மி குறிப்பிட்டுள்ளார்.azmin5azmin8

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...