Thursday, October 19th, 2017

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள்.

Published on September 23, 2017-1:48 pm   ·   No Comments

vada 8சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர்களின் பாவனைக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியன வழங்கும் வைபவம் 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை குடாரப்பு மற்றும் தாளையடி ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

இந்த வைபவங்கள் வடமராட்சி கிழக்கு கோட்டகல்விப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

குடாரப்பில் நடைபெற்ற வைபவத்திற்கு வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் குடாரப்பு பகுதியில் உள்ள வறிய மாணவர்கள் 13பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாளையடியில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவரும் மருதங்கேணி வைத்தியசாலை நலன்புரி சங்க செயலாளருமான சி.பொன்னம்பலம், முன்னாள் பிரதேச செயலாளர் கலாநிதி புத்திசிகாமணி, வைத்திய கலாநிதி உமாபதி, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் 18பேருக்கான வாழ்வாதார உதவிகளும், யுத்தத்தினால் காலை இழந்த செல்வரஞ்சனா என்ற பெண்ணுக்கு மோட்டார் சைக்கிளும், வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபா வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயலாளர் சி.பொன்னம்பலத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் முன்னேற்றம் ஒன்றே எமது அமைப்பின் குறிக்கோள் என தெரிவித்தார். கடந்த 10ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கி வரும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் எமது பிரதேசம் எமது மக்கள் என்ற இலக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகிறது, நாம் வழங்கும் உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வைபவங்களுக்கான ஏற்பாடுகளை வெற்றிலைக்கேணி பாடசாலை அதிபர் த.செல்வகுமார், மாமுனை பாடசாலை அதிபர் சந்திரமோகன் ஆகியோர் செய்திருந்தனர். vada 9vada 8vada 7vada 6vada 5vada 4vada 3vada 2vada 1vada

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...