Tuesday, February 20th, 2018

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு

Published on September 23, 2017-2:19 pm   ·   No Comments

img42செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி சைவத்தமிழ்த்தொண்டன் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்களுக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அவரின் அகவை 60ஐ ஒட்டி செங்காளன் செம்மாக்கிறேத்தனில் 17.09.2017 அன்று நடத்தப்பட்ட மணிவிழா நிகழ்வின்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

மணிவிழா நிகழ்வுகள் செங்காளன் AU இல் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றன.

நிகழ்வுகளுக்கு முன்பாக சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ  கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது. ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் இந்த விசேடபூசையை சிறப்பாக நடத்தினார். அதனைத் தொடர்ந்து விழா நாயகன் கணேசகுமாரும் அவரது பாரியார் மகாதேவியும் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் சகிதம் அழைத்துவரப்பட்டனர்.

மண்டப வாசலில் அவரது சகோதரிகளான உதயகுமாரி கணேசராஜா,பத்மகுமாரி தர்மரத்தினம் ஆகியோர் ஆரார்த்தி எடுத்து விழா நாயகனை வரவேற்றனர். அதைத்தொடர்ந்து விழா நாயகனின் 60 வது அகவையை ஒட்டி கேக் வெட்டும் நிகழ்வு அவரது குடும்பத்தினர் சகிதம் இடம்பெற்றது. மணிவிழா ஏற்பாட்டுக்குழுவினரால் வடிவமைக்கப்பட்ட மண்டபத்தில் மணிவிழா நிகழ்வுகள் சிவநெறிச் செல்வர் ஆறுமுகம் செந்தில்நாதன் தலைமையில் ஆரம்பமாகின.

மங்களவிளக்கேற்றல், தேவாரம், அகவணக்கம் ஆகியவற்றுடன் ஆரம்பமான விழாவில் அருள்மிகு ஸ்ரீ        கதிர்வேலாயுதசுவாமி  ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் ஆசியுரை வழங்கினார.;
அதைத்தொடர்ந்து ஆறுமுகம் செந்தில்நாதனின் தலைமையுரை இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து மணிவிழா நாயகனின் மணிவிழா மலர் வெளியீடு இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் முதல் பிரதியை உலகச் சைவப்பேரவைத் தலைவர் யோகானந்த அடிகளாருக்கு வழங்கி மலரை வெளியிட்டு வைத்தார். அதன் பின்னர் விருந்தினர்களுக்கு மலர் வழங்கப்பட்டது. தாயகத்தில் அரசதுறையில் உயர்பதவிகளை அலங்கரித்து தற்போது சுவிஸில் வாழும் மார்க்கண்டு ஜெயமோகன் மலர் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 25க்கு மேற்பட்டவர்கள் வாழ்த்துமடல்களை வழங்கி கணேசகுமாரின் ஆன்மகீத்தொடர்பு, அவரின் செயற்பாடுகள் தொடர்பாக பாராட்டுரை வழங்கினர். ஊடகவியலாளர் ரவி செல்லத்துரை, ஆலய பொருளாளர் சதா அற்புதராஜா, செயலாளர் க.கருணாகரன், உபதலைவர் எஸ். மகாலிங்கசிவம், இ.புவனேந்திரன், பொன் தாமோதரம் உட்பட பலர் பாராட்டுரை வழங்கினர்.

அதன்பின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, உலகச் சைவப்பேரவைத் தலைவர் யோகானந்த அடிகள் ஆகியோர் கணேசகுமாரின் பண்பு மற்றும் அவரது சேவைகளைப் பாராட்டி உரையாற்றினர். இறுதியில் மணிவிழா நாயகன் தனது ஏற்புரையை நிகழ்த்தினார.;

தான் கடந்து வந்த காலச்சுவடுகளை எடுத்துக்கூறிய அவர் எதிரக்hலத்தில் ஆன்மகீத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக குறிப்பிட்டார். அவரது குடும்பத்தார் சார்பில் சுந்தரலிங்கம் செல்வக்குமரனும் ஏற்பாட்டுக்குழு சார்பில் சதா. அறு;புதராஜாவும் நன்றியுரை வழங்கினாரக்ள். img51img50img48img47img45img44img42

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...