Tuesday, February 20th, 2018

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…!

Published on October 14, 2017-1:11 pm   ·   No Comments

valvaiதீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் இராணுவத்தி னரின் பலத்த அச்சுறுத்தல்களின் மத்தியில் மீண்டும் வல்வை நகர சபைக்குரியதாக மாறியபின் பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினரால் 5 மில்லியன் வழங்கப்பட உள்ள நிலையில் சில அரசியல் வாதி களின் பதவிக்கான போட்டிகள் காரணமாக சபை இயங்க முடியாத நிலை யில் முதலமைச்சரினால் தனிநபர் விசாரணையின் பின்னர் சபை கலைக்க ப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூங்கா அமைக்கு ம்பணியும் முடிவுக்கு வந்தது. தற்பொழுது முன்னாள் வல்வைப் பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்து வல்வை மக்களை இந்திய இராணுவத்தி னரிடம் இருந்து காப்பாற்றியதில் பெரும் பங்காற்றிய பட்டயக் கணக்காளர் சபாரத்தினம் செல்வேந்திரா அவர்களின் தலைமையில் த.சுந்தரலிங்கம், தி.சித்திரவேல், கஜேந்திரன், இராமானத் சி.ஜெகப்பிரதாபன் ஆகியோரினால் மரநடுகைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர் வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இதனை புதிய சபையின் பங்கேற்புடன் நவீன பூங்காவாக அமைக்க ப்பட வுள்ளதாக திரு.ச.செல்வேந்திரா தெரிவித்தார்.

அதேவேளை புனிதமான ஒரு இடமாகப் பேணப்பட வேண்டிய மேற்படி சூழலில் வல்வெட்டித்துறை நகர சபையினர் திண்மக் கழிவுகளையும் கட்டிட இடிபாட்டு மக்கி களையும் கொட்டி வருவதால்,இதன் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டு வருவ துடன் நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் அடிக்கடி நகரை வலம் வந்து மேற்பார்வை செய்வதுடன் இத்தகைய நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுத்து வதுடன் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை யும்,கட்டிட இடிபாடுகளையும் உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வல்வெட்டித்துறை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே வேளை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில் அதிகளவிலான சுகாதாரத் தொழிலாளர்கள் சேவையில் இருந்தபோதும் வீதித் துப்பர வுப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படாததால் வல்வை நகர வீதிகளும் வெற்றுக் காணிகளும் நுளம்புகள் மற்றும் பாம்புகள் பெருகும் வகையில் பற்றைகள் நிறைந்த இடமாகவும் மாறி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.valvai

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...