Sunday, November 19th, 2017

குழு மோதலில் ஏழு பேர் காயம்.

Published on October 16, 2017-11:34 am   ·   No Comments

kattankudyமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் (15) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர், புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில்,  மணமகனொருவர், மணமகளிடம் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே, இந்த குழு மோதல் ஏற்பட்டுள்ளதென, விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்;, புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்று, அவ்வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீதுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள,; இளைஞனை காப்பாற்ற முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில், மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஏழு பேர் காயமடைந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில,; விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்னும் எவரும் இது தொடர்பில் கைது செய்யப்படவில்லையெனவும், காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.kattankudy

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...