Tuesday, February 20th, 2018

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு!

Published on October 17, 2017-11:37 am   ·   No Comments

battiமட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்மொழிவுகள் ஆராயும் சந்திப்பு நேற்று (16/10/2017) மாலை 6,மணிக்கு மட்டுநகர் நல்லையாவீதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட பணிமனையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்குமாகாண அமைச்சருமான கௌரவ கி. துரைராச்சிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞா.ஶ்ரீநேசன், கௌரவசீ.யோகேஷ்வரன், முன்னாள் மாராளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா,பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான இ.பிரசன்னா,மா.நடராசா,ஞா.கிருஷ்னபிள்ளை இ.துரைரெட்ணம் தமிழரசு கட்சி மட்டக்களப்பு தொகுதி செயலாளரும் ஓய்வு நிலை காணி அதிகாரியுமான கே.குருநாதன் உட்பட தமிழ்தேசியகூட்டமைப்பின் பிரமுகர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்படகூடிய நகரசபைகள்,பிரதேச சபைகள் சம்பந்தமாகவும் ஏற்கனவே பத்திரிகையில் வெளியிடப்பட்ட உத்தேச புதிய பிரதேசசபைகளின் எல்லைகள் சம்மந்த மாகவும் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன் தமிழ்தேசியகூட்டமைப்பால் இதற்கான முன் மொழிவுகளையும் யோசனைகளையும் ஆட்சேபனைகளையும் ஆதாரத்துடன் அறிக்கை தயாரித்து எதிர்வரும் 25/10/2017, ம் திகதிக்கிடையில் சம்மந்தப்பட்ட அமைச்சர் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு உரிய முறையில் அனுப் புவது என இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை மாகாண தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் சம்பந்தமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அடிப்படையில் எவ்வாறான வகையில் தொகுதிகள் பிரிக்கப்படும் என்பது தொடர்பாக மேலோட்டமாக ஆராயப்பட்டபோதும் இது தொடர்பாக மேலும் ஒருதினத்தில் ஆராய்ந்து எதிர்வரும் 02/11/2017,க்கு முன்பு சம்மந்தப்பட்ட எல்லை நிர்ணய குழுவின் பணியகத்துக்கு அனுப்பபடவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது உள்ளூராட்சி சபைகள் நகர சபைகளை புதிதாக ஏற்படுத்துவதற்கான பொதுமக்கள் கருத்தறியும் விளம்பரமும் மாகாணசபைகளுக்கான தொகுதி ரீதியான எல்லை நிர்ணயம் சம்மந்தமாகவும் பொதுமக்கள் அபிப்பிராயங்களை அறியும் வண்ணம்பத்திரிகைகள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு இதற்கான இறுதி திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த வகையில் உள்ளூராட்சி சபைகள் புதிதாக நிறுவுதல் சம்மந்தமாக எதிர்வரும் 25/10/2017க்கு இடையிலும்,மாகாணசபை புதிய தொகுதிகள்பிரிப்பு சம்மந்தமாக எதிர்வரும் 02/11/2017, க்கு பிந்தாமலும் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் வழங்கமுடியும்.

இந்த அடிப்படையில் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற அடிப்படையில் தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க உள்ளதாகவும் அந்த கோரிக்கைகள் கைளித்தபின்பு அதன் முழுவிபரத்தையும் ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தமுடியும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

நன்றி அம்பிலாந்துறை இணையம்.batti

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...