Monday, December 18th, 2017

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு.

Published on October 19, 2017-10:32 pm   ·   No Comments

vadama 3வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு கோட்டகல்வி பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் கலந்து கொண்டார். சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி ஆர்.விஜிதகுமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 45மாணவர்களும், அவர்களுக்கு கற்பித்த 17 ஆசிரியர்களும், அவர்களை வழிநடத்திய 14 அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் போரினாலும் சுனாமியாலும் மிகவும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச மாணவர்கள் கல்வியில் மிக துரிதமாக முன்னேறிவருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தின் வளர்ச்சி என்பது கல்வியில் தான் தங்கியுள்ளது. கல்வித்தூண்களான இம்மாணவர்கள் மாறிவரும் உலகிற்கு ஏற்ப இந்த பிரதேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுப்பார்கள் என நம்பலாம். போரினாலும் இயற்கை அழிவினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மாணவர்கள் இதிலிருந்து மீண்டு இன்று கல்வித்துறையில் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த வருடம் 45மாணவர்கள் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளிலிருந்து 5ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களுக்கான நிதி உதவிகளை சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தால் நான்கு குடும்பங்களுக்கு தலா 30ஆயிரம் ரூபா வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.vadama 3vadama 1vada 1vadama 2vadama

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...
HDRLanka (16)

இலங்கையில் பல்சமய இல்லம் [December 10, 2017]

நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு ...
TNA me

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்கு பிரிப்பில் குழப்பம்- அவசரமாக கூடுகிறது ரெலோ. [December 4, 2017]

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சில சபைகளில் கூடிய ஒதுக்கீடுகளை தமக்கு ...
NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...