Wednesday, January 17th, 2018

புதிய பிரதேசசபைகளை உருவாக்கும் விடயத்தில் தூங்கிக்கிடக்கும் தமிழர் தரப்பு

Published on October 26, 2017-3:39 pm   ·   No Comments

mapமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபரால் பத்திரிகைகள் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் மாவட்ட மட்டத்தில் செயல்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு இது தொடர்பான கொள்கைகளை வகுக்க கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்வதற்காக அறிவித்தல் என்ற அறிவிப்புடன் இந்த விளம்பரம் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபிப்பதற்கு மூன்று முன்மொழிவுகள் மட்டும் தமக்கு கிடைத்திருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1. கோறளைப்பற்று மத்தி ( வாழைச்சேனை ) என்ற பெயரில் புதிதாக பிரதேச சபை ஒன்றை நிறுவுதல்.
2. கோறளைப்பற்று தெற்கு ( கிரான் ) என்ற பெயரில் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல்
3. காத்தான்குடி நகரசபையை மாநகரசபையாக தரம் உயர்த்துவதுடன் காத்தான்குடியின் சில கிராமசேவையாளர் பிரிவுகளையும் அதனை அண்டிய தமிழ் கிராமங்களையும் இணைத்து காத்தான்குடி பிரதேச சபை என்ற பெயரில் புதிய பிரதேசசபை ஒன்றை நிறுவுதல்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளும், முஸ்லீம் அமைப்புக்களும் தான். இந்த மூன்று கோரிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் நலன் சார்ந்ததாகும்.

அப்படியானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துமாறோ அல்லது புதிதாக ஸ்தாபிக்குமாறோ தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புக்களும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமான தமிழர்கள் வாழ்கிறார்கள், 24வீத முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். ஆனால் 75வீதமானவர்களின் முன்மொழிவுகள் கோரிக்கைகளை புறம்தள்ளிவிட்டு 24 வீதமானவர்களின் முன்மொழிவுகளை மட்டும் மாவட்ட செயலகம் கருத்தில் எடுத்ததா என்ற கேள்வி எழுகிறது.

உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக உருவாக்குதல் பற்றிய அறிவிப்பு முன்னர் வெளிவந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்திருந்ததாகவும் அதில் தமிழ் பிரதேசங்களில் புதிதாக 6 பிரதேச சபைகளை உருவாக்குமாறு கோரியிருந்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படி சமர்ப்பித்திருந்தால் அவர்களின் முன்மொழிவுகள் அந்த அறிவிப்பில் இடம்பெறாமல் போனதேன்?

தமிழர் தரப்பில் பட்டிருப்பு தொகுதியில் புதிதாக இரு பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது களுவாஞ்சிக்குடி நகரத்தை அண்டிய பிரதேத்தில் நகரசபை ஒன்றையும் களுவாஞ்சிக்குடியின் ஏனைய பகுதிகளை இணைத்து பிரதேச சபை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்றும், மண்டூர் நவகிரி பிரதேசத்தை இணைத்து ஓரு பிரதேசசபையையும் கரடியனாறு பகுதியில் ஒரு பிரதேசசபையையும் கிரான் தமிழ் கிராமங்களை இணைத்து ஓரு பிரதேசபையையும் கல்லடியிருந்து நொச்சிமுனை வரையான பிரதேசங்களை இணைத்து பிரதேசசபை ஒன்றையும் நிறுவுமாறு தமிழர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது

ஆனால் தமிழர் தரப்பால் கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு முஸ்லிம் தரப்பால் கொடுக்கப்பட்ட முன்மொழிவுகளை பரீசீலனைக்கு எடுத்து பத்திரிகை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருப்பதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முஸ்லீம்களின் இந்த மூன்று முன்மொழிவுகளும் தமிழ் பிரதேசங்களில் உள்ள நிலங்களை தமது பிரதேசங்களுடன் சேர்க்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள புள்ளிவிபரத்திணைக்கள அதிகாரிகளும் துணைபோயுள்ளனர்.

உள்ளுராட்சி மற்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் என்ற அறிவிப்பு வெளியான உடன் முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம் பொது அமைப்புக்களும் இரவுபகலாக மக்கள் சந்திப்புக்கள் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காத்தான்குடி இப்போது நகரசபையாக இருக்கிறது. அதனை மாநகரசபையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரப்பட்டிருக்கிறது. இதேவேளை காத்தான்குடியின் சில கிராமசேவகர் பிரிவுகளையும் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் நொச்சிமுனை பெரியவெளி (எருமைத்தீவு) போன்ற பிரதேசத்தை உள்ளடக்கி காத்தான்குடி பிரதேசசபை என்ற பெயரில் புதிய பிரதேச சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தமிழர்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும். தமிழ் மக்களுக்கு சொந்தமான நெற்காணிகளை கொண்ட எருமைத்தீவை காத்தான்குடியுடன் இணைக்குமாறு முஸ்லீம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். எருமைத்தீவு மட்டக்களப்பு நகருக்கு மிக அண்மையில் உள்ள தீவாகும். இது மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்திற்கு உட்பட்டதாகும்.

அதேபோன்று காத்தான்குடியை அண்டி உள்ள தமிழ் கிராமங்களான மஞ்சந்தொடுவாய் நொச்சிமுனை பகுதிகளை காத்தான்குடி பிரதேசசபையுடன் இணைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையும் தமிழ் மக்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும். காத்தான்குடியுடன் இணைக்கப்பட்டால் இக்கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்படுவதுடன் தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாயமும் ஏற்படலாம்.

ஏற்கனவே காத்தான்குடி ஏறாவூர் வாழைச்சேனை பகுதிகளை அண்டி இருந்த தமிழ் மக்கள் முஸ்லீம்களின் நெருக்கடிகள் அச்சுறுத்தல்களால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இப்போது அப்பகுதிகளில் முஸ்லீம்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில் காத்தான்குடி பிரதேசசபையுடன் மஞ்சந்தொடுவாய் நொச்சிமுனை கிராமங்கள் சேர்க்கப்பட்டால் அங்கிருந்து தமிழர்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்படும்.

கோறளைப்பற்று மத்தி என்ற பெயரில் புதிய பிரதேசசபைக்கான கோரிக்கையும் தமிழர் நிலங்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகும். வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள ரிதிதென்ன, புனானை கிழக்கு ஒமாடியாமடு பகுதிகளில் முஸ்லீம் குடியேற்றங்கள் அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரிதிதென்ன என்ற இடத்தில் 400ஏக்கர் அரச நிலத்தில் மட்டக்களப்பு கம்பஸ் என்ற பெயரில் பாரிய நிலப்பிரதேசங்களை உள்ளடக்கிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் திறக்கப்பட்டால் அதனை சூழஉள்ள பகுதிகள் அனைத்திலும் முஸ்லீம் குடியேற்றம் உருவாகும். இந்த பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் புதிய பிரதேசசபைக்கான முன்மொழிவுகளும் முஸ்லீம் தரப்பால் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோன்று கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள ஊத்துச்சேனை வடமுனை வாகநேரி கள்ளிச்சை ஆகிய கிராமங்களை இணைத்து பிரதேசசபை ஒன்றை நிறுவுதல்,

இந்த மூன்று முன்மொழிவுகளும் முஸ்லீம்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

இந்த மூன்று முன்மொழிவுகள் பற்றிய கருத்துக்களை இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கருத்துக்களை தெரிவிப்பதாக இருந்தால் நவம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்ற பி;ன்னர் புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதிலும் தொடர்ந்து இழுபறி நிலை காணப்படுகிறது. பதில் அரசாங்க அதிபராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான புஸ்பகுமார என்ற சிங்களவரே பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த பதில் அரசாங்க அதிபரே இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட பணிமனையில் கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரான கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் மாராளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான இ.பிரசன்னா, மா.நடராசா, ஞா.கிருஷ்னபிள்ளை இ.துரைரெட்ணம் தமிழரசு கட்சி மட்டக்களப்பு தொகுதி செயலாளரும் ஓய்வு நிலை காணி அதிகாரியுமான கே.குருநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்படகூடிய நகரசபைகள், பிரதேச சபைகள் சம்பந்தமாகவும் ஏற்கனவே பத்திரிகையில் வெளியிடப்பட்ட உத்தேச புதிய பிரதேசசபைகளின் எல்லைகள் சம்மந்த மாகவும் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

தமிழ்தேசியகூட்டமைப்பால் இதற்கான முன் மொழிவுகளையும் யோசனைகளையும் ஆட்சேபனைகளையும் ஆதாரத்துடன் அறிக்கை தயாரித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கிடையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி;னர் அரியநேத்திரன் தெரிவித்திருக்கிறார்.

மாகாண தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் சம்பந்தமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் இது தொடர்பான முன்மொழிவுகளை நவம்பர் 2ஆம் திகதிக்கு முன் சம்மந்தப்பட்ட எல்லை நிர்ணய குழுவின் பணியகத்துக்கு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய பிரதேசசபைகளை உருவாக்குதல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பை பார்த்தால் முஸ்லீம்களால் மட்டுமே முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது போல தெரிகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழர்கள் எந்த முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை என்பது போன்ற தோற்றப்பாடே தெரிகிறது.

உண்மையில் தமிழர் தரப்பு முன்மொழிவுகளை சமர்ப்பித்தால் அரசாங்க அதிபர் ஏன் அதனை அந்த அறிவிப்பில் வெளியிடவில்லை.

அரசாங்க அதிபரின் பத்திரிகை விளம்பரம் வெளியான பின் விழித்தெழுந்தவர்களாக கடந்த 16ஆம் திகதி கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் முன்மொழிவுகளை சமர்ப்பித்தால் அந்த முன்மொழிவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எந்த கேள்வியும் அங்கு எழுப்பப்படவில்லை. புதிய கோரிக்கைகளை முன்வைப்பது என்றே அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால் முஸ்லீம் சமூகம் பல மாதங்களுக்கு முன்பே மக்கள் சந்திப்புக்களை நடத்தி இது தொடர்பான அறிஞர்களின் ஆலோசனைகளை பெற்று சரியான முறையில் முன்மொழிவுகளை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பித்ததன் விளைவாக அந்த முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. map

தமிழர் தரப்பும் இவ்வாறு சரியான முறையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தால் மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

இந்த விடயத்தில் தமிழர் தரப்பில் பாரிய தவறு இடம்பெற்றிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தேர்தல் வந்தவுடன் கடைபரப்பும் தமிழர் தரப்பு தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குறியாக்கும் விடயங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உருப்படியான எதனையும் செய்வதாக தெரியவில்லை.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் தூக்கி கிடந்தது போன்ற நிலமை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
( இரா.துரைரத்தினம் )0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...