Wednesday, January 17th, 2018

சம்பந்தன் கூற்று நிகழுமானால் கிழக்கு மாகாண தமிழர்கள் வங்க கடலில் வீழ்வதை தவிர வேறு வழியில்லை

Published on November 5, 2017-1:09 pm   ·   No Comments

valaichenai 1கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசம் ஒன்றில் பயணிகள் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை கூட அமைக்க முடியாத அவல நிலையில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் வாழைச்சேனை கறுவாக்கேணியில் இடம்பெற்ற சம்பவத்தை குறிப்பிட முடியும்.

வாழைச்சேனை கறுவாக்கேணி நூறு வீதம் தமிழர்களின் பிரதேசம். அங்கு பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்கு எப்படி முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என அங்குள்ள நிலைமைகளை புரியாதவர்கள் நினைக்கலாம். அல்லது அப்பிரதேசம் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என சிலர் நினைக்கலாம். ஆனால் நூறு வீதம் தமிழர்கள் காலம் காலமாக வாழும் பூர்வீக நிலம். ஆனால் அந்த நிலத்தில் கூட பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரால் முடியாமல் போய்விட்டது.

மட்டக்களப்பில் 75வீதமான தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு அதிகாரம் இழந்தவர்களாகவே வாழ்கின்றனர்.
முஸ்லீம் அரசியல்வாதியும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தான் காரணம் என கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பஸ் தரிப்பு நிலையம் என்பது ஒரு இனத்தின் நன்மை சார்ந்த விடயம் அல்ல. பயணிகள் அனைவரும் பயன்படுத்தும் பொது இடம்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதியில் பஸ் தரிப்பு நிலையம் இல்லாததால் மக்கள் மழையிலும் வெய்யிலிலும் கஸ்டப்பட்டு வந்தனர். எனவே கறுவாக்கேணி பொலிஸ் நிலைய சந்தியில் பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதே பொருத்தமானது என பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அந்த பகுதியில் இன்னொரு பிரச்சினையும் நீண்டகாலமாக நிலவி வந்தது. ஓட்டமாவடியை சேர்ந்த முஸ்லீம் முச்சக்கர வண்டி சாரதிகளே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். அந்த இடத்தில் தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளை நிறுத்துவதற்கு அனுமதிப்பதில்லை. அடிக்கடி இந்த பிரச்சினை தொடர்ந்து நிலவி வந்தது.

அந்த பகுதியில் எந்த ஒரு முஸ்லீம் குடியிருப்பாளர்களும் இல்லை என்ற போதிலும் ஓட்டமாவடியை சேர்ந்த முச்சக்கர வண்டிகள் அந்த பகுதியில் வந்து தரித்து நின்று தொழில் செய்து வந்தனர்.

இதேவேளை வாழைச்சேனை பிரதேசத்தில் ஆறு முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் உண்டு. அந்த ஆறு இடங்களையும் முஸ்லீம் முச்சக்கரவண்டி சாரதிகளே பயன்படுத்துகின்றனர். தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளை அந்த இடங்களில் அனுமதிப்பதில்லை.
இதனால் கறுவாக்கேணியில் தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகள் தரித்து நின்று தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கறுவாக்கேணியில் தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகள் அந்த இடத்தை பயன்படுத்த முடியாமல் முஸ்லீம் முச்சக்கர வண்டி சாரதிகளால் தடுக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்டகால தேவைகளில் ஒன்றாக இருந்த பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தை கறுவாக்கேணி பொலிஸ் நிலைய சந்தியில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இதற்கென இரண்டு இலட்சம் ரூபாவினை பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார். இதற்கு வாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

பஸ் தரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அத்திவாரம் இடப்பட்ட போது அந்த இடத்தில் பஸ் தரிப்பு நிலையத்தை அமைக்க கூடாது என கூறி முஸ்லீம் முச்சக்கர வண்டி சாரதிகளும் ஓட்டமாவடியிலிருந்து வந்த சில முஸ்லீம்களும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பஸ் தரிப்பு நிலையத்திற்கென இடப்பட்ட அத்திவாரத்தை மூடி அதற்கு மேல் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமது பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தியை தடுக்கும் முஸ்லீம்களுக்கும் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. முஸ்லீம்கள் கொட்டன்கள் இருப்பு கம்பிகள் கொண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தமிழ் இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் தமிழர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

வாழைச்சேனை பொலிஸாரும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாகவே செயற்படுகின்றனர் என அப்பிரதேச தமிழ் மக்களின் குற்றச்சாட்டாகும். கறுவாக்கேணி சந்தியில் மேற்கு பக்கமாக ( ஓட்டமாவடி பக்கமாக ) முஸ்லீம்களும், கிழக்கு பக்கமாக தமிழர்களும் சுமார் 7 மணிநேரம் வீதியை மறித்து போராட்டம் செய்தனர்.

இது இரு தரப்புக்கும் இடையிலான மிகப்பெரிய விரிசலாக அமைந்திருந்தது. இந்த இடத்தில் பஸ் தரிப்பிடம் அமைப்பதால் இரு சமூகங்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் எனவே இதனை பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்துமாறு உத்தரவிடுமாறு வாழைச்சேனை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். உடனடியாக இடைக்கால தடை உத்தரவை நீதிபதி விதித்தார்.
இந்த இடத்தில் ஒன்றையும் நாம் நினைவு படுத்த வேண்டும். காத்தான்குடியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் பேரிச்சம் மரங்களை அகற்றுமாறு நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கிய போது அந்த நீதிபதியை இடமாற்றம் செய்து விட்டு புதிய நீதிபதி ஒருவரை நியமித்து தமக்கு சார்பாக தாம் தீர்ப்பை எழுதுவித்ததாக ஏற்கனவே முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். ( அவர் பேசிய காணொளியும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ) இவ்வாறு அரச நிர்வாகத்தில் மட்டுமல்ல நீதிமன்றங்களிலும் முஸ்லீம் அரசியல்வாதிகளால் தலையிட முடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்கள்.

தமக்கு சார்பாக தீர்ப்பு எழுதவில்லை என்பதற்காக நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்களும் ஏற்கனவே நடந்துள்ளன.
வாழைச்சேனை கறுவாக்கேணி சம்பவம் மட்டக்களப்பு தமிழ் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. தமது பிரதேசத்தில் நடைபெறும் சிறு சிறு அபிவிருத்திகளை கூட எதற்காக தடுக்கிறார்கள் என்ற ஆதங்கமும் வேதனையும் மேலோங்கி உள்ளது.

முஸ்லீம் மக்களின் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள ஓட்டமாவடியிலோ காத்தான்குடியிலோ அல்லது ஏறாவூரிலோ பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் போது அதனை தமிழர்களால் தடுக்க முடியுமா? அப்படி தடுப்பது எந்தவகையில் நியாயம்?

இந்த விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமக்கு இருக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களின் திறமையும் ஆளுமையும் ஒற்றுமையுமாகும். ஆனால் வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலைய விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டுமே தமிழ் மக்களின் பக்கம் நின்றிருக்கிறார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஏனைய தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனோ இது தங்களுக்கான பிரச்சினை இல்லை என மௌனம் காத்துள்ளனர். தமிழ் அரசியல்வாதிகளை பொறுத்தவரை தமிழர்களின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் ஒற்றுமையாக இருந்த வரலாறே இல்லை.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ரிதிதென்ன என்ற இடத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அரபு நாடுகளின் பெருந்தொகையான நிதி உதவியுடன் மட்டக்களப்பு கம்பஸ் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அமைத்து வருகிறார். இதனை சுற்றி முஸ்லீம் குடியேற்றங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த பிரதேசத்தில் குடியேற்றங்களும் தனியார் பல்கலைக்கழகமும் இயங்க ஆரம்பித்த பின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இனவிகிதாசரத்தில் மாற்றம் ஏற்படும் என்பது திண்ணம். ஆனால் அதற்கு தமிழர்கள் எவரும் தடைபோடவில்லை. முஸ்லீம் பிரதேசம் ஒன்றில் தமிழர்களால் தனியார் பல்கலைக்கழகமும் குடியேற்றங்களும் அமைக்க முடியுமா? ஆனால் தமிழர்களால் தங்கள் பிரதேசத்தில் சிறிய பஸ் தரிப்பு நிலையம் ஒன்றைக் கூட கட்ட முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் தங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் வாழைச்சேனை பிரதேச பாடசாலை மைதானம் ஒன்றில் முஸ்லீம்கள் அத்துமீறி குடியேறி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை முஸ்லிம் நபரொருவர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம் 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையுடன் இணைந்ததாக மைதானம் அமைக்கப்பட்டிருந்ததுத
இந்நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவர்  அவ்விளையாட்டு மைதானத்தின் கிழக்குப் பகுதியில் மைதானத்திற்குக் குறுக்காக வேலியமைத்து அப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளார்.

வடக்கில் எவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடியேற்றப்படுகிறார்களோ அது போன்றே கிழக்கிலும் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் திட்டமிட்ட முஸ்லீம் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
வாகரை பிரதேச செயலகப்பிரிவில் காரைமுனை என்ற தமிழ் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு அமைச்சர் அமிர்அலியின் உதவியுடன் முஸ்லீம் மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் திட்டமிடலில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் நடைபெறுவதை போலவே கிழக்கில் அவரின் கட்சியை சேர்ந்த அமைச்சர் அமிர்அலியின் வழிகாட்டலில் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
வாகரை பிரதேச செயலக பிரிவில் ரிதிதென்ன பகுதியில் முஸ்லீம் குடியேற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் வாகரைக்கும் ரிதிதென்னக்கும் இடையில் உள்ள காட்டுப்பகுதியான காரைமுனையிலும் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்;ச்சியாகவே ரிதிதென்ன கிராமத்தில் இருந்த வரலாற்று தொன்மை வாய்ந்த விநாயகர் ஆலயம் அண்மையில் தீவைக்கப்பட்டது
வாகரைப் பிரதேச  செயலகப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் புனானையை மையமாக முஸ்லீம் குடியேற்றங்களும் அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை வைத்தே செய்து வருகின்றனர்.

வாகரை கதிரவெளி காயான்கேணி மாங்கேணி கிருமிச்சை மேவாண்டகுளம் வாகனேரி புனாணை போன்ற பகுதிகள் இதில் அடங்குகின்றன. இந்த குடியேற்றத்தின் தொடர்ச்சியாகவே புனானை பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லீம் தரப்பிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவில் எவ்வாறு புத்தளம் போன்ற இடங்களில் உள்ளவர்களை கொண்டு வந்து அமைச்சர் றிச்சாட் பதியுதீன் குடியேற்றுகிறாரோ அதேபோன்று மட்டக்களப்பில் வெளிமாவட்ட முஸ்லீம்களும் அமைச்சர் அமிர்அலி மற்றும் ஹிஸ்புல்லா போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக வாகரை ஆலங்குளத்தில் மருதமுனையை சேர்ந்த 30 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த குடியேற்றங்களும் சனத்தொகை பரம்பலும் அதிகரித்தால் இதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்தல் அடுத்து சனத்தொகைபரம்பலை வைத்து அதன் அடிப்படையிலான அரச அலுவலகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகளை ஏற்படுத்துதல். இதன் மூலம் தமிழர் அதிகம் வாழும் கற்குடா தொகுதியினை முஸ்லீம்களின் தொகுதியாக மாற்றுவதே ஆகும்.
மட்டக்களப்பிலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அல்லது எழுதுபவர்களை இனவாதிகளாக சித்தரித்து அவர்களையும் அடக்கி விடவே சிலர் முற்பட்டுள்ளனர்.
இதற்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் துணைபோவதுதான் வேதனையான விடயம்.
இந்த குடியேற்றங்களை முன்னின்று நடத்தும் அமைச்சர் ஹிஸ்புல்லா, அமிர்அலி, முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட், அலிசாகிர் மௌலானா துணிச்சலோடு தமது இனத்திற்கான வேலைகளையும் குடியேற்றங்களையும் செய்கின்றனர்.
காளிஅம்மன் ஆலயத்தின் காணியை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தானே சுவீகரித்து அதனை ஓட்டமாவடி பள்ளிவாசலுக்கு வழங்கியதாகவும் அந்த நிலத்தில் இறைச்சிகடை உட்பட சந்தை கட்டிடத்தை அமைப்பதற்கு தானே நிதியை ஒதுக்கியதாகவும் கூறியிருந்தார். அதேபோல வாழைச்சேனை இந்து மயான காணியை சுவீகரித்து அதில் முஸ்லீம் பிரதேச செயலக கட்டிடத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் இந்த விடயங்களை வெளிப்படையாக பேசிய ஒளிநாடாவும் வெளியாகியிருந்தது

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டு முஸ்லீம் கிராமங்களாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் பிரதேசத்தில் பயணிகள் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதையே இன்று தமிழ் கட்சியினால் முதலமைச்சராக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இந்த இலட்சணத்தில்  இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபைக்கும் முஸ்லீம் ஒருவரையே முதலமைச்சராக்குவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருக்கிறார்.

அது நிகழுமானால் கிழக்கு மாகாண தமிழர்கள் வங்ககடலில் விழுவதை தவிர வேறு வழியில்லை.

( இரா.துரைரத்தினம் )valaichenai 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...