Sunday, November 19th, 2017

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது

Published on November 13, 2017-10:57 pm   ·   No Comments

thandaமட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை முற்பகல் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாண்டவெளி,  பாரதீ வீதி இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா,சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட 27வயதுடைய பெண் காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின்போது ஆண் உரைகள்,கஞ்சா உட்பட பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண்றோர் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.thandathandavan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...