Tuesday, February 20th, 2018

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார்.

Published on November 21, 2017-2:15 pm   ·   No Comments

NFGGஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை சபை அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் தலைமை காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது , சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் விசேட அதிகாரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இனவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவர் எடுத்துரைத்ததாக அக்கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெறுப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கங்கள் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவே அளுத்கம கலவரம் போன்ற பாரிய வன்முறைகளாக அவை மாறியது எனவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்தே இந்த இனவாத தாக்குதல்கள் பெரும்பாலும் இடம் பெறுவதனையும் அவர் தெளிவு படுத்தினார்.

அவ்வாறான இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சகல மக்களும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே புதிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கிய போதிலும் தற்போதைய அரசாங்கம் கூட அதனை செய்வதற்கு தொடர்ந்தும் தவறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதன் விளைவாக தற்போது காலி – ஜின்தோட்டையிலும் முஸ்லிம்களை இலக்கு வைக்கும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்பதனையும் எடுத்துரைத்த அப்துர் ரஹ்மான் சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டுவதில் பாராபட்சமான போக்கு நிலவுவதே இதற்கான அடிப்படைக் காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து சிறு பான்மை மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதுபோன்று, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான பிரச்சினைகளையும் வடகிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினைகள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார். மேலும், அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் புதிய தேர்தல் முறையானது சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்ற விடயத்தையும் அவர் விளக்கியதோடு இந்த விடயங்கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

அப்துர் ரஹ்மான் முன்வைத்த விடயங்களை ஆர்வத்துடன் செவிமடுத்த அந்த அதிகாரி இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தான் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாகவும் இவை தொடர்பாக தொடர்ச்சியான அவதானங்களையும் அறிக்கைகளையும் தொடர்ந்தும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

உரிய இராஜதந்திர வழி முறைகள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்துவதாகவும் அவர் இச்சந்திப்பின் போது உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்களின் போது அக்கட்சி;யின் சிரேஸ்ட செயற்குழு உறுப்பினரான முஹம்மட் இஸ்ஸதீன் ஜெனிவாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான முயீஸ் வஹாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.NFGG

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...