Tuesday, February 20th, 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்கு பிரிப்பில் குழப்பம்- அவசரமாக கூடுகிறது ரெலோ.

Published on December 4, 2017-1:17 pm   ·   No Comments

TNA meஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சில சபைகளில் கூடிய ஒதுக்கீடுகளை தமக்கு தரவேண்டும் என்றும் ரெலோ புளொட் ஆகிய இயக்கங்கள் அடம்பிடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பிரிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதா அல்லுத தொடர்ந்து நீடிப்பதா என ஆராய்வதற்காக ரெலோவின் உயர்பீடம் நாளை கூட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா கூறியிருக்கிறார்.

ஆனால் ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஓருபோதும் பிரிந்து செல்லாது, தமிழரசுக்கட்சியை வழிக்கு கொண்டுவருவதற்கு இப்படி சில அறிக்கைகளை அவர்கள் விட்டுக் கொண்டிருப்பார்கள் என தமிழரசுகட்சியினர் கூறுகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் ரெலோவுக்கு நான்கு சபைகளை வழங்குவதற்கு தமிழரசுகட்சி இணங்கினாலும் மட்டக்களப்பில் ஓருசபைகளையும் வழங்க முடியாது, சில உறுப்பினர்கள் தெரிவாகும் வகையில் சில வட்டாரங்களையும் குறிப்பிட்ட சில உறுப்பினர்களை விகிதாசார பிரதிநிதித்துவத்திலும் நியமிக்க முடியும் என தமிழரசுகட்சி தெரிவித்துள்ளது.

நாளை மாலை 6மணிக்கு ரெலோவின் உயர்பீட கூட்டத்தை அக்கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா கூட்டியிருக்கிறார்.

மட்டக்களப்பில் தமக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை என்பதே ரெலோவின் பிரதான குற்றச்சாட்டு.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் பங்கு பிரிப்பது தொடர்பான கூட்டம் நாளை பிற்பகல் 2மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.   நேற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். TNA me

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...