Wednesday, January 17th, 2018

இலங்கையில் பல்சமய இல்லம்

Published on December 10, 2017-3:30 pm   ·   No Comments
HDRLanka (16)நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு தமிழ்மக்களுக்கு அனுபவரீதியான பயம் வரலாறு கற்பித்த பாடமாக அமைந்துள்ளது.
இருதரப்புக்களிடையில் இல்லது பல்தரப்புக்களிடையில் முரண்பாடு, அல்லது வாழமுடியாத சூழல் எக்காரணத்தால் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்து வைத்தல் என்பது, வெறுமனே அரசியலில் மட்டும் தங்கியில்லை.
ஒருவழிப்பாதையில் சென்று திரும்பமுடியா நிலையில் பல பேச்சுவார்த்தைகள் அர்தமற்றுப்போய் உள்ளன. பலமாக இருந்தபோது பேச அழைத்து பின் சூழச்சிகளால் பலவீனப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்ட வரலாறும் எம்மைக் கடந்து சென்றுள்ளது.
அதேநேரம் ஈழத்தமிழர்களின் தனித்துவமான வாழ்வியற்சூழல், வரலாறு, தொன்மை, என்பவதுவும் சரியாக எதிரிகளுக்கும் அறிவுரீதியாக நிறுவி விளக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எம்மிடையில் வந்துபோவதுண்டு.
அறவழியில் சைவத்தையும் தமிழையும் ஒழுகி இளந்தமிழச் செல்வங்களுக்கு சீர்திருத்தத்துடன் சைவநெறியை வாழத்தக்க வகையில் வழங்க வேண்டும் எனும் நோக்கில் பயணிக்கும் சைவநெறிக்கூடத்தின் முன் மேலாலன பணியும் ஒரு கிiளாயாக வந்தமைந்துள்ளது.
மூவின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் நான் சமயங்கள் வாழப்படுகின்றன. ஒருவரை ஒருவர் புரியவும், அல்லது தத்தமது பண்பாட்டு வாழ்வியலை ஒருவருக்கொருவர் நெருங்கியும் தோழமையுடவ் வாழும் சூழல் சவாலாகவே உள்ளது.
உள்ள பிரச்சனைகள் அப்டியே இருக்க புரிதலை மாய மந்திரமாக திருவிறக்க முடியாது என்பதையும் சைவநெறிக்கூடமாகிய நாம் அறிவோம்.
அதேநேரம் உண்மையான நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் வாழ்வியலை பிற இனத்தவர்களுக்கு இங்கு புலத்தில் புலப்படுத்துவதுபோல் தாயகத்திலும் தமிழர் வாழ்வியலை ஏனைய பல்லின சமயமக்களுக்கு விளக்கவும், பல்சமயங்களின் பங்களிப்பால் முடிளவு முரண்பாடுகளைத் நீக்கவும் இலங்கையிலும் ஒரு பல்சமய இல்லம் பயன்படும் எனும் பொதுநோக்கில் தை 20017 முதல் ஒரு திட்டம் சைவநெறிக்கூடத்தினதும், பல்சமய இல்லத்தில் பங்களாராக இருக்கும் பௌத்த சமயத்தவர்களது கூட்டு முயற்சியிலும் தொடங்கப்பெற்றது. இலங்கை இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக 09. 12. 2017 சனிக்கிழமை மாலை 16.00  மணிமுதல் பேர்ன் பல்சமய இல்லத்தில் 2வது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்மீரா அமைப்பும் இத்திட்டதிற்கு தனது பங்களிப்பினையும் ஆற்றுகிறது.
புத்தளத்தில் பல்சமய இல்லம் அமைப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக அங்கி நான்கு சமயத்தவர்களது வழிபாட்டுத் தலங்களும் அத்துடன் பல்லினமக்களும் கூடும் திடலும் அமையவுள்ளது.
அனைத்தையும் வெளிப்படையாகப் பேசவும், நிபந்தனைகள் அற்றும் விரோதம் அற்றும் தமது நிலைப்பாட்டை விளக்கவும், பொறுப்புணர்வுடன் அனைத்தையும் செவிமடிக்கும் பண்பினை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் நடுவமாகவும் இது விளங்க வாய்ப்புள்ளதாக திருநிறை சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும், பௌத்த துறவி திருநிறை. பண்டே அவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
சுவிசில் பல்சமய இல்லத்திற்கு உள்ள சாவால்களைவிட இலங்கையில் வேறுவகைய சவால் இருப்பதை தாம்
அறிவார்கள் என்றும், அதேநேரம் பிரச்சனைகளுக்கு இது தீர்வினை உடன் தராது விட்டாலும் உண்மையுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல நடுவமாக விளங்கும் என்றும் இன்றைய சந்திப்பில் உறுதிகொணட்டனர்.
சுவிற்சர்லாந்து பல்சமய இல்லத்தின் மதியுரையுடன், பல்மீரா அமைப்பின் அனுசரணையுடன், சைவநெறிக்கூடம், பல்சமய இல்லத்தின் பௌத்த மன்றம் ஆகிய இணைந்து தொடங்கிய இத்திட்டத்தில் சைவநெறிக்கூடம் ‘உளவியல் சொற்களும், ஆன்மீக சிந்தனை மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வினைத் தராது, அதேநேரம் மனித முயற்சி கைவிடல் ஆகாது’ எனும் அனுபவத்துடன் பயணிப்பதாக இக்கூட்டத்தில் பங்கெடுத்த தமிழர் ஒருவர் கருத்துடன், விரும்புவோர் இக்கூட்டு முயற்சியில் உறுப்பினராகாலம் என பொது அழைப்பு யாவருக்கும் விடுக்கப்பட்டு கூட்டம் 18.30 மணிக்கு நிறைவடைந்தது.HDRLanka (1)HDRLanka (16)HDRLanka (20)

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...