Wednesday, January 17th, 2018

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு

Published on January 5, 2018-4:25 pm   ·   No Comments

raveendranபொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் தொடர்பாக பொலிஸார் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் உடன் கிழக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தலாம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் அருணாச்சலம் ரவீந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது

பொது மக்களுக்கு அரணாக விளங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொலிஸாருக்கு உண்டு.
பொலிஸார் நடந்துகொள்ளும் முறையில் முறைப்பாடுகள் இருந்தால் மடடக்களப்பு மாவடட செயலகத்தில் உள்ள மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடலாம்.

குறிப்பாக, முன்வைத்த முறைப்பாடுகள் மீது பொலிஸார் செயற்படாது இருத்தல், பொதுமக்களை தாக்குதல் அல்லது அடித்தல், துன்புறுத்தல், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், பக்கசார்பாக நடந்து கொள்ளல், பாரபட்சம் காட்டுதல், தடுத்து வைத்தல், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி காவலில் வைத்தல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடல், காவலில் இருக்கும்போது துன்புறுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முறையிடலாம்.

பொலிஸ் வாகனம் அல்லது பொலிஸ் அலுவலர் தொடர்புபட்ட விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு, பொலிஸ் நடவடிக்கையின் போதான துப்பாக்கி பிரயோகம் விசாரணைக்கு தேவையான ஆவணங்கள், பதிவேடுகளை தேவையானபோது பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே மேற்படி விடயம் தொடர்பில் முறையிடுவதற்கும் உடன் ஆலோசிப்பதற்கும் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலதிக விவரங்களுக்கு
தேசிய போலீஸ் ஆணைக்குழு, மடடக்களப்பு
மடடக்களப்பு மாவட்ட செயலகம்
தொலைபேசி : (1094)0655107722raveendran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...