Wednesday, January 17th, 2018

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர்.

Published on January 8, 2018-2:45 pm   ·   No Comments

srinesan 3புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்கு வாக்கு கேட்டு வரும் போது நீங்கள் கடத்தியவர்கள் எங்கே என கேளுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை அழித்துவிட்டு கைகட்டி மௌனித்து முட்டுக்காலில் வைக்கக்கூடிய சமூகத்தை கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக இருந்தது. மக்கள் வாய்திறந்து பேசக் கூடாது அவ்வாறு பேசினால் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எழுத்தப்படாத சட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்தது என்றும் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில் – 2005ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிஙகம் நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுகொல்லப்பட்டதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டக்களப்பு வர முடியாத பாதுகாப்பற்ற சூழல் ஏற்ப்பட்டது இந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பிள்ளையான் குழு வெற்றி பெற்றார்கள் அந்த கனவுடன் இம்முறையும் பிள்ளையான் குழு போட்டியிட நினைக்கிறார்கள்.

2010ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் தெரிவானார்கள் ஆனால் பிள்ளையான் குழு தோல்வியையே சந்தித்தனர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆசனங்களை கைப்பற்றியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் எவலாளர்களாக இருந்தவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர் நடேசன், நிர்மலராஜன், விரிவுரையாளர் தம்பையா, உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல புத்திஜீவிகள் ஊடகவியாளர்கள் கல்விமான்கள், செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதை வேட்டையாடிய வேட்டைக்கார்கள் யார்?

இவர்களது பிரதிநிதிகள் வாக்குகேட்டு வந்தால் நீங்கள் கடத்தியவர்கள் காணாமல் ஆக்கியவர்களை நேரில் கொண்டுவந்தால் உங்களுக்கு ஆதரவு வழங்குவோம் என கூறவேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் சோரம் போகாத கட்சியிலுள்ளவர்கள், கொள்கையுடன் செயற்படுபவர்கள், இலஞ்ச ஊழலில் அகப்படாதவர்கள் மக்களின் உரிமையையும் அபிவிருத்திiயும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்க வேண்டும்’ என்றார்.srinesan 3

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...