Thursday, February 22nd, 2018

கூச்சப்படாமல் பொய் சொல்லும் நபர்கள் பற்றி சுமந்திரன் விளக்கம். ( முழுமையான வீடியோ)

Published on January 28, 2018-2:15 pm   ·   No Comments

sumanthiranதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக இலஞ்சம் வாங்கினார்கள் என சிவசக்தி ஆனந்தன் கூச்சப்படாமல் பொய் சொல்லி வருகிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பி;னருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் கடந்த செப்டம்பர் மாதம் கிராமிய உட்கட்டமைப்பு மேம்படுத்தலுக்கான விசேட திட்டத்திற்கு முன்மொழிவுகளை வழங்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டிருந்தது.

இதற்கமைய 2கோடிக்கான திட்டங்களை நாம் மாவட்ட செயலகங்களுக்கு வழங்கினோம். மாவட்ட செயலகமே இந்நிதியை கையாளும். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்;டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக இலஞ்சம் வாங்கியதாக சிவசக்தி ஆனந்தன் கூச்சப்படாமல் பொய் கூறிவருகிறார்.

சிவசக்தி ஆனந்தன் மகிந்த இராசபக்ச காலத்திலும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார். இந்த அரசாங்கத்தின் இதற்கு முன்னைய இரு வரவு செலவு திட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்திருக்கிறார். அப்படியானால் கடந்த காலங்களில் சிவசக்தி ஆனந்தன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக எவ்வளவு இலஞ்சம் வாங்கினார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இராணுவத்திற்கு உளவு பார்ப்பதற்காக சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் அரசாங்க கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டிந்தது. இதேபோல இராணுவத்திற்கு உளவு பார்ப்பதற்காக ஈ.பி.டி.பி, மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோருக்கும் அரசாங்க கட்டிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அரசாங்க கட்டிடத்திற்கு சிவசக்தி ஆனந்தன் வாடகை வழங்கினாரா? என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

1990ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்திற்கு வவுனியாவில் உளவு பார்ப்பதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவசக்தி ஆனந்தனுக்கு அரசாங்க கட்டிடம் வழங்கப்பட்டிருந்தது. அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே அந்த கட்டிடம் மீளப்பெறப்பட்டிருக்கிறது.

இப்படியான சிவசக்தி ஆனந்தன் எந்த துணிச்சலுடன் இந்த பொய்களை கூறிவருகிறார் என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

முழுமையான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. sumanthiran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...