Thursday, February 22nd, 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிக்கென தனித்தொகுதி உருவாக்கப்படும்.

Published on January 28, 2018-2:53 pm   ·   No Comments

hisbullahதொகுதி வாரி முறையிலேயே எதிர்வரும் மாகாணசபை மற்றும் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி தனி முஸ்லீம்கள் வாழும் தொகுதியாக இருக்கும். கல்குடா தொகுதியிலும் முஸ்லீம் ஒருவர் தெரிவாக வாய்ப்பிருக்கிறது. எனவே நான்கு தொகுதிகளை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கல்குடா தொகுதிகளில் முஸ்லீம்களும் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிகளில் தமிழர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஊருக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் இருந்ததால் தான் எமது ஊருக்கான மாகாண சபை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி, ஊர் வீதி சின்னப்பள்ளி சதுக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்த வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்கவும் மாட்டோம். தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரி தேர்தல் முறையானது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் உள்ள அநேகமான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. ஆட்சியமைக்கும் அதிகாரம் எந்தக் கட்சிக்கும் இல்லாது போகும். கூட்டாட்சி நடத்தும் நிலையே ஏற்படும். அதனால் குழப்பமான, நிலையற்ற சபையாகவே அது இருக்கும். இந்நிலை, காத்தான்குடி நகர சபைக்கு ஏற்பட்டு விடக்கூடாது என ஹிஸ்புல்லா தெரிவித்தார். hisbullah

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...