Thursday, February 22nd, 2018

வவுனியா மண்டையன் குழு தலைவனுக்கு வந்த அதிர்ச்சி- மாவையை மண்டையில் போடுவேன் என புலம்பல்

Published on February 3, 2018-1:43 pm   ·   No Comments
Sivasakthy Ananthanதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என்ற சிவசக்தி ஆனந்தன் எம்.பி யின் கூற்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் வவுனியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்திருந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குத் தில் இருந்தால் தான் அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் வாங்கியதாகக் கூறுவதை நிரூபிக்குமாறும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிவசக்தி ஆனந்தனுக்குப் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் பலவற்றிலும் இவ்விடயம் பெரும் பூதாகரமாகப் பேசப்பட்டது. தற்போது இலங்கையில் என்ன நடந்தாலும் அதனை அறிந்துகொள்ளக் கூடிய தகவல் அறியும் சட்டம் நடைமுறையிலுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனது பதிலுக்கமைவாக ஊடகவியலாளர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுள்ளார்கள் என்ற சிவசக்தி ஆனந்தனின் கூற்றை அறிவதற்காக தகவல் அறியும் சட்ட மூல படிவத்தின் மூலம் குறித்த துறைசார் திணைக்களத்துக்கு விண்ணப்பித்து தகவல்களைப் பெற்றிருந்தனர். அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் எதனையும் பெறவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தி நிதியே குறித்த திணைக்களங்களூடாக ஒதுக்கப்பட்டுள்ளன என்னும் விடயம் அதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனைச் சில ஊடகங்கள் திரிபுபடுத்தி இரண்டு கோடி பெற்றார் சிறீதரன் என பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்குடன் செய்திகளை வெளியிட அதனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் தமது முகநூல் சமூகவலைத்தளங்களூடாகப் பரப்பி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும் இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுவது வழமையான ஒன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது அவர்கள் குறிப்பிடுகின்றவர்களிடமோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களது வங்கிக்கணக்குக்களுக்கோ வழங்கப்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின், பிரதேசங்களின் அபிவிருத்தித் தேவை கருதி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை திட்டங்களாக முன்வைக்கப்படும் போது அதனை ஆராய்ந்து குறித்த துறைசார் திணைக்களங்களூடாக அரசாங்கமே நிதியை ஒதுக்கி அத்திணைக்களங்களின் துறைசார் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களின் துணையுடன் அவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்படியாக பிரதேச அபிவிருத்தி கருதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கமைவாக ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்ற விடயங்களைத்தான் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பெருமளவான மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதிகள் மிகமோசமாகப் பழுதடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி புனரமைக்கப்பட வேண்டியுள்ளதனைச் வலியுறுத்தி அண்மையில் துறைசார் அரசாங்க அமைச்சுக்குக் கடித மூலம் வலியுறுத்தியிருந்தார். இத்திட்டங்களும் எதிர்காலத்தில் மக்களின் தேவைகருத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசாங்கத்திடம் இலஞ்சம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் எனக்கூற முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலான கூட்டணியாகச் சேர்ந்ததன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வசைபாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Sivasakthy Ananthan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...