Thursday, February 22nd, 2018

லண்டனில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்.

Published on February 6, 2018-5:00 pm   ·   No Comments

sri-lanka-army-threat-ukலண்டனில் ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டி கொலை செய்வேன் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தி உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்’ என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. சிங்கள இணையத்தளங்களும் இதனை வெளியிட்டிருந்தன.

இந்த விடயம் கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது.
பிரித்தானிய இராஜதந்திரிகளும் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயத்தை கொண்டு வந்திருந்தது.

லண்டனில் இலங்கை தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கழுத்தை வெட்டி படுகொலை செய்யும் இராணுவ பிரிவுக்கு தலைமை தாங்கியவர் என்றும் கூறப்படுகிறது.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரில் இனப்படுகொலைகளை புரிந்த படை அதிகாரிகளின் பட்டியலில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் விருந்தினராக, இராஜதந்திர அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பிரித்தானியாவின் ஜனநாயக விழுமியங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இராஜதந்திரியாக இருந்தாலும் பொதுவெளியில் கொலை அச்சுறுத்தல் விடுவது சட்டத்திற்கு முரணான செயல் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். sri-lanka-army-threat-ukforein

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...