Sunday, September 2nd, 2018

சட்டவிரோத மாடுகடத்தல்களுக்கு எதிராக பட்டிப்பளையில் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published on August 30, 2018-12:03 pm   ·   No Comments

paddi 1மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான மாடுகளை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் கடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத மாடு கடத்தலுக்கு எதிராக பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

சட்டவிரோத மாடு கடத்தலை உடனடியாக நிறுத்தக்கோரி பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததுடன், நேற்றைய தினம் மாடுகடத்தலை தடுத்த நபர்களை தாக்கியமைக்கு எதிராக பட்டிப்பளை பொலிஸ் நிலையம் வரை சென்ற ஆர்ப்பாட்டாக்காரர்கள் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.

நேற்று சில நபர்கள் இப்பகுதிக்குள் வந்து மாடுகளை கடத்தி சென்ற போது அதனை அக்கிராம மக்கள் தடுத்தனர். அம்மக்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்களை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.paddi 1paddipaddi 2

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kok

தமிழர் நிலங்கள் பறிபோகாது எவ்வாறு தக்கவைத்து கொள்வது- கொக்கட்டிச்சோலையில் அவசர கூட்டம். [September 2, 2018]

நேற்று (01/09/2018) பிற்பகல் 3:30  மணிக்கு கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ  தான்தோன்றிஸ்வரர் ...
hc_Al_Hussein_smll

சிறிலங்கா இராணுவம் அரசுக்கு கீழ்ப் படிய மறுக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர். [September 1, 2018]

சிறிலங்கா இராணுவம் காணிகள் விவகாரத்தில் சிறிலங்கா அரசுக்கு கீழ்ப்படிய   மறுக்கிறது ...
valai

வாழைச்சேனையில் தமிழர்களின் வீடு வாசல்களை உடைத்து தரைமட்டமாக்கிய முஸ்லீம் நபர். [September 1, 2018]

வாழைச்சேனை மீராவோடையில் தமிழ் குடும்பங்களின் வீடுவாசல்களை கட்டிட ஒப்பந்தகாரரான முஸ்லீம் ...
valampuri

பொய் செய்தியை வெளியிட்;ட வலம்புரி பத்திரிகை தீயிட்டு கொழுத்தப்பட்டது. [September 1, 2018]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் ...
sumanthiran

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை. [August 31, 2018]

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என ...
IMG_7143

உலகளாவியரீதியில் ஒலித்த காணாமலாக்கப்பட்டவர்களுகான குரல் !! [August 31, 2018]

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாயையொட்டி பல்வேறு விழிப்பு நிகழ்வுகள் உலகம் தழுவியரீதியில் ...
risath and maithiri

ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் வெளியே- ராஜித பதில். [August 31, 2018]

ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் ...
meat

ஆஸ்திரேலியாவில் தமிழ் உணவகத்தின் சமையலறையில் நாய் பூனைகளுக்கான இறைச்சி கண்டுபிடிப்பு! [August 31, 2018]

Pet Meat எனப்படும் செல்லப்பிராணிகளுக்குக் கொடுப்பதற்காக பொதிகளில் அடைத்து விற்கப்படும் ...
IMG_3025

கனடாவில் சிறப்புற நடைபெற்ற தமிழர் தெருவிழா – அதிதியாக யாழ்.மேயர். [August 31, 2018]

வருடா வருடம் கனடாவின் பெரிய அமைப்பான தமிழ் காங்கிரஸ் அமைப்பின் ...
ISIS

சிட்னியில் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கைது. [August 31, 2018]

ஆஸ்திரேலியாவில் சிட்னி பிரதேசத்தில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று ...